நுன்கலையும் சமுதாயமும்

இன்றுள்ள நமது சமுதாயம் இரண்டு வர்க்கங்களைக் கொண்டது. அவை, பொருளும் வசதியும் படைத்தவர்கள் சமுதாயம். அடுத்தவர்கள் பொருளும் வசதியுமற்ற சமுதாயம். இந்த சமுதாயப்பிரிவு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

பொருள் படைத்த வர்க்கத்தரிடம், எல்லா வசதிகளும் இருக்கின்றன; ஆகையால் அவர்கள் கல்வி, அறிவு, கலைகள் முதலியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். பொருள் வசதி இல்லாவிட்டாலும் கல்வி, அறிவு, கலை, முதலியவற்றிலே சிறந்தவர்கள் பொருள் படைத்த வர்க்கத்தாரை ஓட்டியே வாழ்ந்து வந்தனர்; வாழ்ந்தும் வருகின்றனர்.

பொருளற்ற வர்க்கத்தினர் பொரும்பாலும் உழைப்பாளிகளாகவும், தொழிலாளிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைப் படகினை ஓட்டுவதற்கே பெரும் பொழுதை கழிக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் கல்வியிலோ; அறிவிலோ, கலையிலோ தேர்ச்சி பெற நேரமும் இல்லை; பொருளாதார வசதியும் இல்லை.

இந்தக் காரணத்தால், நமது நாட்டில் இன்று வளர்ந்திருக்கும் கலைகள், காவியங்கள், கவிதை, இலக்கியங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் சுவைத்துப் பொழுது போக்குகின்றர்.
வளர்ந்திருக்கும் கலைகளும், கவிதைகளும், கதைகளும் உயர்ந்த வர்க்கத்தினரின் வாழ்க்கைகளை சித்தரிப்பவனவாகவே அமைந்திருகினறன. சினிமா உட்பட.
கலைகள், கதைகள், கவிதைகள், காவியங்கள் வளர்வதற்கு வசதி படைத்தவர்களே உதவி செய்து வந்தனர், வருகிறார்கள். இவைகள் தங்கள் பொழுதுபோக்குவதற்கு உதவின என்ற காரணத்தால்தான் இவைகள் வளர்வதற்கும் உதவி செய்து வந்தனர்.

வசதி படைத்தவர்களால் கலைகள் வளர்ந்தன, என்பதைக் கொண்டு, வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கலையுணர்ச்சி படைத்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும் கலை உணர்ச்சி உண்டு. அவர்களும் கவிதைகளையும் காவியங்களையும், கலைகளையும் படித்து, கேட்டு, பார்த்து, சுவைக்கும் உணர்ச்சி
படைத்தவர்கள். இத்தகைய மக்களுக்கான கலைகளும், நாட்டில் ஒரு புறத்தில் வளர்ந்து கொண்டுதான் இருந்தன. இவர்கள் சுவைக்கும் வகையில் கலைகளை வளர்த்த அறிஞர்களும் நாட்டில் இருந்தனர்.

கூத்திலே அரசர்களுக்காக ஆடும் கூத்து, பொதுமக்களுக்காக ஆடும் கூத்து என்று இரண்டு பிரிவு இருந்தன; இது இலக்கியங்களில் காணப்படும் செய்தி. இது போலவே இலக்கியங்களிலும் பொதுமக்களுக்கான இலக்கியங்கள், உயர்ந்த வர்க்கத்தினருக்கான இலக்கியங்கள் என்று இரு பிரிவுகள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக கலையை எடுத்துக் கொள்வோம். பரதநாட்டியம் என்பது அரியதொரு கலை.
இதை நுண்ணறிவு, கலைரசனை படைத்தவர்கள்தான் பார்த்து அதன் நளினத்தை சுவைக்க முடியும். மற்றவர்கள், நடனமாடும் மங்கையின் அழகைத்தான் சுவைக்க முடியும். ஆகவே ,
கல்வி அறிவு படைத்த ஓய்வு நேரத்தை மிகுதியாகப் பெற்ற வசதி படைத்த- மக்களின் பொழுதுபோக்குக்காக வளர்ந்த கலைதான் இது.

கரகம் எடுத்து ஆடுதல், காவடி தூக்கி ஆடுதல், கும்மி-கோலாட்டம் முதலியவைகளும் கலைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இக்கலைகளை உழைப்பார்களும், வறியவர்களும் பார்த்து பரவசம் அடைகிறார்கள். பரத நாட்டியத்தைவிட இக்கலைப் பயிற்சி எளிது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால் இக்கலைகளை மக்கள் கலை என்று சொல்லிவிடலாம்.
பாடல்களும் , சங்கீதங்களும் நுண்கலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்கீதம்
கர்நாடக இசைக் கலைஞர்கள் ராகம், தாளம், பல்லவிகளிலே சொக்கி அதில் லயத்துவிடுவார்கள். ஆ னால், ஏழைப் பொதுமக்களுக்கு இத்தகைய உயர்ந்த சங்கீதங்களை ரசிக்க, சுவைக்க முடியவதில்லை. பாடல்களிலும், தியாகராஜ கீர்த்தனம், முத்துத்தாண்டவர் பதம் போன்ற சரித்திரக் கீர்த்தனை முதலியவைகளைப் பொதுமக்கள் அவ்வளவாக சுவைப்பதில்லை.
எளிதாக பாடக் கூடிய - நன்றாக விளங்கக் கூடிய தெம்மாங்கு, தில்லானா, டப்பா, சிந்து முதலிய பாடல்கள். இவ்வகையான எளிய பாடல்கள் பொதுமக்கள் சுவைக்கின்றனர். இதனை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகவே, கலை, சங்கீதம்பாட்டு இவைகளிலே இரு பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம்.

காவியங்களை எடுத்துக் கொள்ளுவோம். காவியங்களும் இருவகையாக , அதாவது பொது மக்கள் காவியம், உயர்ந்த வர்க்கத்தினர் காவியம் என்று இரண்டு வகையாகவே வளர்ந்திருக்கினறன.

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes