கண்ணோடு கண்

பெருங்கதை - உஞ்சைக் காண்டம்கொங்கு நாட்டின் பேரிலக்கியம் பெருங்கதை; கொங்குவேளிர் யாத்தது.உதயணன் அக் காப்பியத் தலைவன்; யானையை அடக்கும் திறம் தெரிந்தவன்.மாமன்னன் பிரச்சோதனன் உதயணனை வஞ்சகத்தில் சிறைப்படுத்தினான்.யூகி, உதயணனின் உயிர்த் தோழன்; அறிவில் தெளிந்தவன்.பிரச்சோதனனின் பட்டத்து யானை 'நளகிரி'க்கு மதம்ஊட்டினான். யானை நகரை கலக்கியது.யானையை அடக்க முடியும்? 'உதயணன்' என்பதே மறுமொழியாயிற்று.சிறை கதவு திறந்தது. உதயணன் யாழ் மீட்டி யானையை அடக்கினான்;யாழில் மயங்கிய யானை மீதேறி மன்னன் பிரச்சோதனனின் மாளிகை சென்றான்.யானை மதங் கொண்டதற்கான காரணம் யாதென வினவினன் பிரச்சோதனன் அவனுக்குமறுமொழி சொல்லத்தான் தலை நிமிர்ந்தான் உதயணன். ஆனால் அங்கே.....விழிகளை ஈர்க்கும் காந்தத்துண்டு !அவை மன்னவன் மகளாம் வாசவதத்தையின் விழிகள் !பார்வைப் பரிமாறல்கள்..... அவை காதலின் தொடக்க வார்த்தைகள்....ம்...."ஆயத் திடையோன் பாசிழைப் பாவையானை மிசையோன் மாமுடிக் குருசில்இருவரும் "வ்வழி பருகுவனர் நிகழ...."

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes