இறைவனின் சாநித்தியமே வாழ்க்கையை மதிப்புடையதாகச் செய்கிறது

இறைவன் மீது ஒருமுனைப்பட்டிருப்பதொன்றே உண்மையாகவே பொருளுள்ள விஷயம், நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புவதைச் செய்வதே செய்யத்தக்க செயல்.

இறைவனே நமது முழுப்பலமும். அவனிருக்கும் போது நாம் எல்லாத் தடைகளையும் வெற்றி கொள்ளலாம்.

ஒருபோதும் கைவிடாத உதவி இறைவனின் உதவியே. ஒருபோதும் கைவிடாத அன்பு இறைவனின் அன்பே. இறைவன் ஒருவனையே அன்புசெய், இறைவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பான்.

இறைவனை மட்டுமே நினை, அப்பொழுது இறைவன் உன்னுடன் இருப்பான்.

எப்பொழுதும் இறைவனை நினை, நீ செய்வதெல்லாம் இறைவனின் சாநித்தியத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

எங்கள் சிந்தனைகளெல்லாம், உணர்ச்சிகளெல்லாம் கடலை நோக்கி ஆறு செல்வதைப்போல் இறைவனை நோக்கிச் சென்றிடும்.

அவனே நமது ஒரே துணையும் ஒரே பாதுகாப்பும் ஆவான்.

-
அன்னை

இறைவன் மீது ஒருமுனைப்பட்டிருப்பதொன்றே உண்மையாகவே பொருளுள்ள விஷயம், நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புவதைச் செய்வதே செய்யத்தக்க செயல்.

நிலைத்திருப்பது, என்றுமுள்ளது, அமரத்தன்மை கொண்டது. எல்லையற்றது எதுவோ அதுவே பெறத் தகுந்தது, வெல்லத் தகுந்தது, உடைமைப்படுத்திக் கொள்ளத் தகுந்தது. அதுதான் தெய்வீக ஒளி, தெய்வீக அன்பு, தெய்வீக வாழ்க்கை - அதுவே புவி மீது பரம சாந்தியையும், பரிபூரண களிப்பையும், அனைத்தையும் ஆளும் ஆட்சியையும் கொண்டுவரும், அதன் சிகரம் பூரண வெளிப்பாடு (Manifestation).

இறைவனிடத்திலேயே நமக்குத் தேவையானவையெல்லாம் இருப்பதை நாம் எப்போதும் காண்போம்.

இறைவன் ஒருவனே நமக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க முடியும்.

இறை உணர்வே உனது வாழ்க்கையின் முதன்மையான ஆற்றலாக இருக்கட்டும்.

இறைவனது சாநித்தியம் உன்னுடன் எப்போதும் இருக்கட்டும்.

நீ எதைச் செய்தபோதிலும் எப்பொழுதும் இறைவனின் நினைவுடனிரு.

இறை உணர்வு ஒன்றே நமது வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இறை உணர்வு ஒன்றே உண்மையான துணை, உண்மையான சுகம்.

இறைவனில், இறைவனால் எல்லாம் உருமாற்றமடைந்து மேன்மையடைகின்றன, எல்லா இரகசியங்களின், எல்லா ஆற்றல்களின் திறவுகோல் இறைவனிடத்தில் உள்ளது.

இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம், இறைவனின் ஞானத்தில் நாம் அறிவோம், இறைவனின் சங்கற்பத்தில் நாம் சித்தி பெறுவோம்.

இறைவனில்லாமல் எல்லாம் பொய்மை, மாயை, துயர்தரும் இருள். இறைவனின் வாழ்வு, ஒளி, மகிழ்ச்சி எல்லாம் உள்ளன. இறைவனில் மேலான சாந்தி உள்ளது.

இறைவனே நமது முழுபலமும். அவனிருக்கும்போது நாம் எல்லாத் தடைகளையும் வெற்றிகொள்ளலாம்.

இரவின் அமைதியில் இறைவனின் குரல் ஒரு இனிய கானத்தைப்போல் கேட்கும்.

இறைவனின் வார்த்தைகள் ஆறுதலளிக்கவும், ஆசிர்வதிக்கவும், நோவாற்றவும், ஒளிபெறச் செய்யவும் செய்கின்றன, இறைவனின் அருட்கரம் எல்லையற்ற ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையின் ஒரு மடிப்பை விலக்கின்றது.

இறைவனின் தியானத்திலுள்ள மகிமை எவ்வளவு அமைதியுடையதாக, உயர்ந்ததாக, தூய்மையானதாக உள்ளது.

வெப்துனியா

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes