வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.
.
மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.
பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.
இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.
மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்
சிரிக்க சிந்திக்க
posted on 16:42
in
இவ்வாரச் சிந்தனைக்கு,
சைவ சமயம்






