Showing posts with label இவ்வாரச் சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label இவ்வாரச் சிந்தனைக்கு. Show all posts

நவராத்திரி


அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு
அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும்
கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக
கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்
சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை
மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை
திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது
நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை
தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.
சரத்காலம் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன்,
இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு
புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி
கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான்
ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று
மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,
நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.
நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த
ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,
தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள் என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும். சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன்
அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய்

சக்தி வழிபாடு.

சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.
இவை இரண்டில்'சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது தனிச் சிறப்புடையது.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால்
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி,
மன நிறைவ எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்
நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.
இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்
தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற
அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி]
மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில்சிற்ப வடிவில் நாம்கண்டுள்ளோம்
வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.
நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை .
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.
அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி ,
சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி .

இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.
கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.
தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ற்றங்கரைச் சொற்கிழத்தி என்று குறிப்பிடுகிறது.
இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.
கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்
உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வதமுறையாகும். இது தேவியின் அவதார நாள்.
சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு
பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.
சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது.
ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.
புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது.
எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை
மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து

நற்காரியங்களும் வெற்றி தரும்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி,
கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி
ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்

சிறப்பாக உள்ளன.
துர்க்கை:
1. மகேசுவரி
2. கெளமாரி
3. வராகி
இலட்சுமி :
4. மாகலெட்சுமி
5. வைஷ்ணவி
6. இந்திராணி.
சரஸ்வதி :
7. சரஸ்வதி
8. நாரசிம்மி
9. சாமுண்டி


நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.
ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும்
கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.
இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின்
குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின்
குறிக்கோள்களில் ஒன்றாகும்.

ஆன்மீக சிந்தனைகள்



* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.

* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.

* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.

* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.

* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.

* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.

* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.

* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.

* உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.

* தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும்.

* ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.

* நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

* எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.

* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.

* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.

* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.

* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.

* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.

* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

* இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே.

* நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை.

* உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.

* எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.

* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.

* மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை.

* உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும்.

* பேசாமல் இருப்பது மட்டுமே மவுனமாகாது. அவசியமில்லாதவற்றை மனதில் சிந்திக்காமல் இருப்பதே மவுனம்.

* விரதம் என்ற பெயரில் மனதோடு போராடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. மனதை பூரண அமைதியில் தவழச் செய்வதே சரியான மவுனமாகும்.

* மவுனம் பழகப் பழக ஆண்டவனின் குரலை நம்மால் கேட்க முடியும். சத்திய வேட்கை உடையவர்கள் பழகவேண்டிய அடிப்படைக் குணம் மவுனம்.

* கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள மவுனத்தைப் போல சிறந்த துணை வேறில்லை.

* மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு நாவடக்கம் மிகவும் அவசியம். அதற்கு மவுனப்பயிற்சி சரியான வழிகாட்டியாக துணை செய்யும்.

* மிகைப்படுத்துவதும், உள்ளதை மறைப்பதும் மனிதனின் இயல்பான குறைபாடாக இருக்கிறது. அதை மவுனம் அடியோடு போக்கிவிடும்.

நன்றி : தமிழர்களின் வண்ணக்களம்

சிரிக்க சிந்திக்க

வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.
.
மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.
பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.
இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.
மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்

கணவன் அல்லது மனைவிக்கு மோசமான தசை நடக்கும் போது குழந்தை பிறக்கலாமா?

வாசகர் கேள்வி: எனக்கு ராகு தசை முடியப் போகிறது. ஆனால் என் கணவருக்கு விரைவில் ராகு திசை துவங்குகிறது. இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என உறவினர்கள் கூறுகின்றனர்? இதில் உண்மை உள்ளதா?





பதில்: பொதுவாக, ‘ராகு கொடுப்பான் கேது கெடுப்பான்’ என ஜோதிடத்தில் கூறுவர். எனவே ராகு தசையில் குழந்தை பெற்றுக் கொள்வது தவறு எனக் கூற முடியாது.



என்னிடம் வந்த பலரது ஜாதகத்தை கணித்ததில், அதில் பலருக்கு நல்ல யோக தசைகளில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனதும், ராகு தசையில் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதும் எனக்கு தெரியவந்தது.



உலகில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவிக்க வாய்ப்பளிக்கும் கிரகம் ராகு. அந்த வகையில் குழந்தை பாக்கியத்தையும் (மழழைச் செல்வம்) அது வழங்குகிறது. எனவே, ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. பாதிப்புகளும் ஏற்படாது.



மனைவிக்கு ராகு தசை முடிந்து கணவருக்கு ராகு தசை துவங்கும் போது அந்தத் தம்பதிகள் தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும், கணவருக்கு 5ஆம் இடத்தில் ராகு இருந்து ராகு தசை நடந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்கள், தீய நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.



பரிகாரம்: ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என அந்தத் தம்பதிகள் கருதினால், மணமுறிவு பெற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் உதவலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி, பணிவிடை செய்யலாம். வாழ்ந்து கெட்ட குடும்பங்களுக்கும் உதவலாம். திருக்கருகாவூர் கோயிலில் உள்ள கருகாக்கும் அம்பிகையை வழிபடலாம்.



ஜோதிடத்தைப் பொறுத்தவரை ராகு என்பது பிதுர் (தந்தை) பாட்டன் என்றும், கேது என்பது மாத்ரு (தாய்) வழிப் பாட்டன் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு புத்தாடை வழங்கி ஆசி பெறுவதும் பலனளிக்கும். முடிந்தால் அவர்களை குடும்பத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.



ஒருவேளை அவர்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தால், அவர்களை இரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை சென்று சந்திப்பதும் அல்லது தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதும் ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பலனளிக்கும்.

வெப்துனியா

குழந்தைகள் ஊனமாகப் பிறப்பது ஏன்?

சர வீடுகளில் (மேஷம், கடகம், துலாம், மகரம்) முக்கியமான கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் அவர் உலகப்புகழ் பெறும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைப்பார்.

நிறைய ஜாதகங்களில் நல்லது, கெட்டதாக சில கோள்களின் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்திற்கு 4ல் குரு உச்சமாக இருப்பது விஷேசம் என்றாலும், அந்த குருவுடன் ராகு/கேது/சனி என இவற்றில் யாராவது ஒருவர் சேர்ந்தால் குருவின் உச்ச பலன் முழுமையாகக் கிடைக்காது.

ஒரு சிலர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள் ஆனால் கால் மட்டும் சற்றே ஊனமாகி விட்டது என்று ஒரு சிலரைப் பற்றிக் கூறுவோம். ஆனால் அந்த ஊனத்தையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நாடே போற்றும் விதத்தில் அவரது முன்னேற்றம் இருக்கும்.

எனவே, ஒரு நல்ல கிரகமும், கெட்ட கிரகமும் ஓரிடத்தில் ஒன்றாக இருந்தால் ஒரு குறையும், ஒரு நிறையும் அவரது வாழ்வில் இருக்கும்.

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் பாக்யாதிபதி, லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி ஆகியோர் வலுவடைந்து, மறுபக்கம் பாவ கிரகத்தின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் ஊனம், பெரிய புகழ் இரண்டையும் அவருக்கு கொடுக்கும்.

வெப்துனியா

பொ‌ய் சொ‌ல்வத‌ற்கு தூ‌ண்டுவது எது?

பிறந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் என்று ஒன்று உண்டு. அதாவது லக்னத்திற்கு 2வது ஸ்தானம் வாக்கு ஸ்தானம். அந்த வாக்கு ஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் அதாவது சுப கிரகங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நல்லது.

இரண்டாவது வீட்டில் புதன் இருந்தால் கவி மாரி பொழிவான். இரண்டாவது இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால் பல மொழிகள் அறிந்தவனாக இருப்பான். குரு இருந்தால் எந்த காலத்திலும் பொய் கூற மாட்டான். ஆனால் சனி, ராகு, கேது இருந்தால் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சில பொய்களைச் சொல்வார்கள்.

செவ்வாய் இருந்தால் திட்டவட்டமாகப் பேசுவார்கள். அதிகாரத் தொனி இருக்கும். இதுபோல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்றார் போல் அவ‌ர்களது வா‌க்கு இருக்கும்.

அடுத்து நா‌ம் பா‌ர்‌க்க வே‌ண்டியது ‌சி‌ந்தனை ‌ஸ்தான‌ம். அது 5வது இடம். 5வது இடம் குணாதிசயம். அந்த இடத்தில் என்ன கிரகம் இருக்குமோ அதற்கேற்ப சிந்தனை உதிக்கும். அதை எடுத்துத்தான் வாக்கு ஸ்தானம் கையாளும். ஒரு சிலர் உண்மையைத்தான் சொல்வார்கள். அவர்களுக்கு 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள், பாதகாதிபதி உட்கார்ந்தால் தவிர்க்க முடியாமல், வாக்கில் குரு இருந்தாலும் கடைசி நேரத்தில் பொய் சொல்லி விடுவார்கள்.

நாம் பார்த்த வரைக்கும் வாக்கு ஸ்தானத்தில் 6, 8, 12க்குரியவர்களோ, 3 க்கு உரிய கிரகங்கள் இருந்தாலோ பொய் சொல்வார்கள்.

தற்போது லக்னத்திற்கு இரண்டாம் இடம் பார்ப்பது போல் ராசிக்கும் இரண்டாம் இடம் பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சுப கிரகம் இருந்தும், ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அப்படியானால் அவ‌ர்க‌ள் அ‌வ்வ‌ப்போது பொய் சொல்வார்கள்.

வாக்கு ஸ்தானத்திற்குரிய கிரகம், 11வது இடத்திற்குரியவனுடன் சேர்ந்தால் பொய் சொல்வதே தொழிலாக அமையும்.

அதுபோலதான் ஸ்திர லக்னம். உபய லக்னம். 2ல் பாதகாதிபதி இருந்தாலோ, 2ஆம் வீட்டிற்குரியவர் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலோ, 5ல் பாவ கிரகம் இருந்தாலோ அவர்கள் பொய் சொல்வார்கள்.

மோசமான கிரகத்தின் தசை நடந்தால் அந்த தசையில் நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கும். வாக்கு ஸ்தானம் 6,8,12க்குரியவன் இருந்தால் உண்மையைப் போல் பொய் சொல்வார்கள்.

புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் முதலாளிகள் இங்கு வந்து பணத்தை கையாளுபவர்களது ஜாதகத்தைப் பார்த்து அவரிடம் கஜானாவை கொடுக்கலாமா என்று கேட்கின்றனர்.

அப்போது, நடத்தைக் கோலம், வாக்கு ஸ்தானம் போன்றவை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கிறோம்.

கள்ளக்காதல் அதிகரிப்பது எதனால்?

கள்ளக் காதலுக்காக பெற்ற மகனையே தாய் கொன்றது தமிழக மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? இது போன்ற நிலை ஏன் ஏற்படுகிறது?

கடந்த முறை சனிப்பெயர்ச்சி (சிம்மத்திற்கு வந்த போது) நடந்த போது சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும் எனக் கூறியிருந்தோம். இன்னும் சில நாட்களில் மீண்டும் சனிப்பெயர்ச்சி நடக்கப் போகிறது.

சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சனியால், கள்ளக்காதல் போன்ற முறைகேடான சம்பவங்கள் அதிகரிக்கும். கள்ளக்காதலை அதிகரிக்கும் கன்னிச் சனி என்றுதான் இந்த சனிப்பெயர்ச்சிக்கு தலைப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிதுனம், கன்னி ஆகியவை புதனின் சொந்த வீடுகளாகும். இதில் ரசனைக்கும், ரம்மியத்திற்கும் உரிய இடமாக கன்னி வீடு வருகிறது. அந்த இடத்தில் சனி அமர்ந்தால் எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஒன்றிருக்க மற்றொன்றைத் தேடும் மனநிலை மனிதர்களிடையே மேலோங்கும். இது 2012ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

கன்னிக்கு வரும் சனி, கள்ளக்காதல், களங்கமான காதல்களை அதிகரிப்பார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட சந்தர்ப்பங்களால், விதிவசப்படி, நெருக்கடி, அச்சுறுத்தல் காரணமாக நெறி தவற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அறிவிக்கப்படாமலேயே விபசாரங்கள் அதிகரிக்கும்.

மனித வாழ்வியல் நெறிமுறைகள் குறிக்கும் கன்னி வீட்டில், சனி அமர்வதால் அந்த நெறிமுறைகளை தகர்த்து எறிவார். இதனால் கள்ளக்காதல், நெறி தவறிய உறவுகள் அதிகரித்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அதனால் ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு சனி உணர்த்துவார்.

எனவே, அனைத்து தரப்பினரும் இனி வரும் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

வெப்துனியா

எந்த நேரத்தில் திருமணம் செய்யலாம்?

பொதுவாக உதயக்காலம் (காலை 6 மணி) அல்லது 9 மணிக்குள், அதிகபட்சம் 10.30க்குள் திருமணம் செய்வது நலம்.

சில மாநிலங்களில் அதாவது ஆந்திராவில் நள்ளிரவு திருமணம் அதிகம். அது அவர்களது நம்பிக்கை. சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நள்ளிரவில் திருமணம் செய்யலாம். சுக்கிர ஆதிகத்தில் பிறந்தவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் நலம் தரும்.

பொதுவாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்

ஆனால் காலை 10.30க்கு மேல் மாலை 4 மணிக்குள் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து ஊனமுற்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினேன். அவரது திருமண ஸ்தானம் அவ்வாறு இருந்தது.

திருமணம் எந்த நேரத்திலும் செய்யலாம் என்பதை அவர்களது ஜாதகத்தைப் பொருத்து நேரத்தைக் கணிக்கலாம். நல்ல லக்னம். நல்ல நட்சத்திரம், நல்ல ஓரை நடக்கும் நாளில் எந்த நேரத்திலும் நடத்தலாம்.

காதலும், கல்யாணமும்

காதலிப்பவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன்வராத நிலையில் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவோம் என்றும், எங்களது காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நாங்கள் இப்படியே இருந்து விடுவோம் என்று கூட சில ஜோடிகள் மிரட்டுகின்றனர்.

இப்படி மிக நெருக்கமாக காதலிப்பவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாமா? அவ்வாறு செய்தால் அவர்கள் நன்கு புரிந்து கொண்டு ஒத்து வாழ்வார்களா?

ஜோதிடம் என்ன கூறுகிறது?

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன் :

காதல் என்பது பொதுவாக பருவத்திற்கு வந்த பிறகு உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் ஈர்ப்பு. ஒரே மாதிரியாக 10 பேர் இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் ஈர்ப்பு வராமல் ஒருவர் மீது மட்டும் ஈர்ப்பு வருவது ஏன்? அதுதான் கிரகங்களின் தாக்கம்.

காதலுக்கு உரிய கிரகம் சுக்கிரன். காதலர்களாக இருக்கும் வரை அவர்களை சுக்கிரனே வழி நடத்திச் செல்கிறார்.

அவர்களே கணவன் - மனைவியாகும் போது லக்னத்திற்கு ஏழாவது வீட்டிற்கு உரிய கிரகமான (சப்தம அதிபதி) வேலை செய்யத் துவங்கிவிடும்.

காதல் கிரகமான சுக்கிரனுக்கு பகை கிரகமானதே ஏழாவது வீட்டிற்கு உரியதாக இருந்தாலோ அல்லது குரு தசை, அட்டமத்து சனி ராகு திசையில் சனி முக்தி, சனி திசையில் ராகு முக்தி, சூரிய-சந்திர திசையில் ராகு-கேது முக்தி நடைபெற்றாலோ காதல் முறியும். இவர்களுக்கு திருமணம் நடத்திவைத்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள்.

எனவே, காதலுக்குத் தூண்டும் கிரகத்துடன் திருமணத்திற்கு உதவும் கிரகம் ஒத்துழைத்தால்தான் அந்தக் காதலர்கள் கணவன்-மனைவியாக முடியும்.

அசைவ உணவு சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனக் கூறுவது ஏன்?

பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.

மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை.

எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குப் பாடம்!

அடி மேல் அடி வைத்து, திட்டமிட்டு அரசியலுக்கு வந்த திரையுலக நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அண்மையில் திடீரென குதிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கிறோம்... பிரமிக்கிறோம்! நாம் மட்டுமா... யாருக்காக வந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரங்களும் கூட!

நாமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல முதல்வராகலாம் என்கிற கனவு அவர்களுக்கெல்லாம் இல்லாமல் இராது.

இந்தத் தருணத்தில், அதாவது டிசம்பர் 24- எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், ஒரு விஷயத்தை நினைவுகூறுவதோடு, சுட்டிக்காட்டுவதும் சாலப் பொறுந்தும்.

அது, அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் பற்றியதே!

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசியலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களில் எண்ணிக்கை வெகுவாகனது.

சினிமா நடிகர் அல்லது நடிகையை பேட்டியெடுக்கச் செல்லும் நிருபர்கள் சிலர், 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வியை தவிர்த்தாலே... பலருக்கும் அரசியல் எண்ணம் குறையும் என்பது நையாண்டியாளர்களின் கருத்து!

அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களில் பலரும் மேடையில் முதலில் உதிர்க்கும் சொல் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்...'

இதில், தவறேதும் இல்லை..!

ஆனால், எம்.ஜி.ஆர். பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றாமல் போனாலும் கூட அடிப்படையான ஒரு விஷயத்தைப் பின்பற்றினாலே, அடுத்தடுத்து சமூக வாழ்வில் தேர்ச்சி வந்துவிடக்கூடும்.

அதுதான் மனித நேயம்... எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவுகளிலும், புரிகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் மனிதே நேயம் என்பது பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும்.

ஓர் அரசியல் தலைவருக்கு வேண்டியும் முழுமுதற் தகுதியே மனித நேயம் என்பது.

இந்தத் தகுதி இருந்ததால் தான் எம்.ஜி.ஆரால் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வராக முடிந்தது. இல்லையேல், இரண்டாவது முறை அவரை மக்கள் முதல்வராக்கியிருக்க மாட்டார்கள்.

வசீகரம் வெறும் முகவரியே... மனிதத்துடன் கூடிய ஆட்சியே மக்களுக்கு வேண்டியது!

நினைவில் ஓர் ஆலயம்



அழிவற்ற கல்வியும் அன்பெனும் ஜீவசக்தியும்
ஆன்மீக கருத்துக்களும் ஆணவமற்ற வாழ்வும்
இளமைப் பருவத்தில் எண்ணும் எழுத்தும்
ஈகையின் அவசியம் கற்பித்த ஆசானும்

உண்மையின் மகத்துவம் உணரவைத்த குருவும்
ஊக்கம் உள்ளோரும் உறுதி கொண்ட மாணவரும்
எட்டாவது தொடங்கி உயர்தர வகுப்பும்
ஏணிப்படிகளாய் இருந்தனர் நற் பெரியோரும்

ஐயம் திரிபுற கற்றோம் பல நூல்களும்
ஒழுக்கமும், பண்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்
ஓர் பெரும் இலட்சியம் உறுதி கொண்ட வாழ்வும்
ஒளவையின் நன்நெறியும், திருமூலரின் திருமந்திரமும்

திருவள்ளுவரின் திருக்குறளும்
கற்பித்த கனகரெட்னம் மத்திய மகா வித்தியாலயம்
மெல்லினம், வல்லினம், இடையினம்
கற்றோம் நாம் தமிழ் மொழியில்

மெல்லினமாம் பெண்களும்
வல்லினமாம் ஆண்களும்
இரண்டும் கலந்த இடையினமாம்
எங்கள் கலவன் பாடசாலை
உயிரும் மெய்யும் உள்ளது தமிழில்
இரண்டென உள்ளதை ஒன்றாக்கிய பெருமை
கற்பித்தவர் கனகரெட்னம் மத்திய மகா வித்தியாலயம்


மீண்டும் மீண்டும் எம் நினைவில் நீ
எம் ஜீவன் இருக்கும்வரை நினைவில் இருப்பாய் நீ
எம் கனவிலும் நினைவிலும் எப்போதும் இருந்தாய் நீ
எம் பள்ளி வாழ்க்கையை மறப்போமா சொல் நீ

எம்மை கவி எழுத வைத்த வாத்தியார் நீ
வாழ்க நிரந்தரம் வாழிய வாழிய நீ
வாழ்த்துகிறோம் நாம்

இவ்வாரச் சிந்தனைக்கு

தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை. ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.

14.01.2009
சுவாமி விவேகானத்தர்

கடவுள் உன் மனதுனுள் தானே இருக்கிறார்

கடவுள் உன் மனதுனுள் தானே இருக்கிறார், உண்மையாக சொன்னால் நீ தான் அது.. சமையலில் கறி செய்ய உதவும் சட்டிக்கும் கரண்டிக்கும் கறியின் சுவை தெரியுமா? சட்டியும் கரண்டியும் கறியை தாங்கியிருந்தாலும் ருசியை அறிவதில்லை.அப்படித்தான் நீயும் அறியாமல் இருக்கிறாய்... வாழ்க சிவவாக்கியர் சிந்தனை.. சிவவாக்கியர் பட்டனத்தாரின் சீடர்.. பெரிய அரசனாக இருந்தவர். அவர் சித்தனாக மறிய கதை

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியேசுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடாநட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும் தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார். - திருவருட்பா - இறவா நிலை.

 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes