திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்றுகார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.தீபவழிபாட்டில் சிறப்பானது '' கார்த்திகை தீபம் ஆகும்."இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருணைப் போக்கி மெய்ஞானத்தைத்தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம்மூன்றையும்தான்தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.''அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகிஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்குஞானத் தமிழ் புரிந்த நான் ''என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.இன்று தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்துபூக்களுடன் ஆ ற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவதுஇன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.'' கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார்.காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வரமண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான்.மாணிக்கவாசகர், ''சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று சிவபெருமானைக்குறித்துப் பாடியுள்ளார்.குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி,சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி வைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரிம் சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன.இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும்.இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால்முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது.வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார்.அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை டாமல்,அசையாமல் சஞ்சமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:''விளக்கொளியாகிய மின் கொடியாளைவிளக்கொளியாக விளங்கிடு நீயே !விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !-- என்று சிறப்பித்துக் கூறுகிறார்.''நலமிகு கார்த்திகை நாட்டவரிட்டதலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...''என்று கார்நாற்பது கூறுகிறது.நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல்அழகுடையவளாய் என்பது பொருள்.இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின்கதை மூலம் அறியலாம்.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே,தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது.இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோதுமகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெறஇறைவன் திருவுளம் கொண்டான்.அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல்பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ''மகரஜோதி'' தரிசனம் கேரளத்தில்மிகவும் பிரசித்தம்.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப்பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி" ஆகும்.திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி த்ரும் தலம் திருவண்ணாமலை.திருவண்ணாமலையில் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில்தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வ்ழிபடப்படுகிறது.கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும்,சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார்சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன்மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும்.அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும்தீப ஒளியை தரிசனம் செயவர்.திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவகசிந்தாமணிகுறிப்பிடுகிறது.தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால்சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனைஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றியவிளக்கு பற்றிக் கூறுகிறது.கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்கஉகந்த விழா கும்.பிறவிப்பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுது, முற்பிறவியில் செய்த பாவங்களைப்போக்கி நன்மை அடைவோம்.திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டுதிருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.நான்காம் திருமுறை. பதிகம் 63. திருவண்ணாமலை : திருநேரிசைதிருச்சிற்றம்பலம்:ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துளங்கு மெண்தோட் சுடர்மழுப் படையி னானேதியே அமரர் கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவிலேனே. 1பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீலகண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதாஅண்டனே யமரர் கோவே அணியணா மலையு ளானேதொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.2உருவமு முயிரு மாகி ஓதிய வுலகுக் கெல்லாம்பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்கஅருவிபொன் சொலியு மண்ணா மலையுளா யண்டர் கோவேமருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 3பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்கஅம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே. 4பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகாமறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவாஅறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானேஇறைவனே யுன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. 5புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலாஅரிகுலம் மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்கவரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. 6இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானேபரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. 7பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்ர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானேதீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே. 8பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானேமாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்லுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானேவாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 9இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்உரத்தினால் வரையை யூக்க வொருவிரல் நுதியி னாலேஅரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறேசிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. 10திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு, அருணகிரிநாத சுவாமிகள் திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ்.கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலேகருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலேவடவனலை முனிந்து வீசிய தென்றலாலேவயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோஇடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீராஎழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலாஅடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவேஅரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.தீப தரிசனத் தத்துவமாக ஒரு பாடலை ஸ்ரீ அருணாசல ஸ்துதிபஞ்சகம் எனும்நூலில் காணநேர்ந்தது. அப்பாடல்,இத்தனுவே நான் ம் எனும் மதியை நீத்து அப்புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்அத்துவிதமாம் மெய் அகச்சுடர் காண்கை பூமத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே.திருச்சிற்றம்பலம்






