தைப்பொங்கல்

முற்றிலும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் சங்ககாலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. கி.மு.200 ம்நூற்றாண்டிலேயே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.ஆனாலும் இன்னும் எப்பொழுது பொங்கல் பொங்கும் வழக்கம் ஆரம்பமானது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை.ஆனாலும் சங்ககாலத்தில் தை உண் தை நீராடல் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.அதன் காலத்தொடர்ச்சியாகவே தைப்பொங்கல் வந்திருக்கலாம் என்று வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர். சங்ககாலத்தில் மார்கழிமாதத்தில் தமிழர்கள் பால் பதார்த்தங்களைப் புறக்கணித்து எண்ணெய் பாவனையை அதிகமாக பயன்படுத்தியும் வநததாகவும் இம்மாதத்தில் அவர்கள் கடுமையான வார்த்தைகளாலேயே மற்வர்களுடன் உரையாடியதாகவும் வரலாறு கூறுகிறது. இவ்வாறான வழக்கத்தை அவர்கள் நிலக்கடவுளுக்கான வழிபாடாகக் கருதினர்.மார்கழிமாத முடிவில் அதாவது தைமாத தொடக்கத்திலேயே பொங்கலின் மூதாதைவிழா என்று சொல்லப்படும் தை நீராடல் இடம்பெற்றதாக வரலாறு சொல்கிறது.இத் தைநீராடல் என்பது 4ம் நூற்றாண்டுக்கும் 8ம் நூற்றாண்டுக்கும் இடையில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது.மாணிக்கவாசகர் எழுதிய திருப்பாவையிலே இந்த தைநீராடல் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தத்தைப்பொங்ல் திருநாளிலே உழவர்கள் இயற்கைக்கு அதாவது நமக்கு வளங்களையெல்லாம் தருகின்ற இயற்கைக்கு நன்றிசெலுத்துவர்.புதிதாக விளைந்த நெல்லை அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும் தமது விவசாயத்துக்கு யாரொல்லாம் அல்லது எதுவெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிசெலுத்தியதாகவும் அதுவே இன்று வரையும் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை வரலாற்றில் 3நாள் விழாவாக கொண்டாடப்பட்டது அதாவது எமது தாயகத்தில் வழக்கத்தில் இல்லையெனிலும் இந்தியாவில் பொங்கலிற்கு முதல்நாள் போகி என்ற விழா மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துகின்ற நாளாகவும்.இரண்டாவது நாளாக சூரியப் பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்துகின்ற நாளாகவும். முன்றாவது நாள் மாட்டுப்பொங்கல் விவசாயிகளுக்கு உதவிசெய்த கால்நடைகளுக்கு நன்றிசெலுத்கின்ற நாளாகவும் இந்த மாட்டுப்பொங்கலின் போது பொங்கல் கால்நடைகளிற்கும் பறவைகளுக்கும் அளிக்கப்படும். இதில் போகி பண்டிகை எமது வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes