சிவாலய வழிபாட்டு முறைகள்

சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை உடுத்தி தூய்மையாக செல்ல வேண்டும். * கோவிலுக்கு அருகே செல்லும் போதே கோபுரத்தை தரிசித்து, சிவாய நாமங்களை உச்சரித்தவாறே உள்ளே போக வேண்டும். * பலி பீடத்தையும், கொடி மரத்தையும், நந்தீஸ்வரையும் கும்பிட வேண்டும். * வடக்கு, மேற்கு நோக்கிய கோவிலாக இருந்தால் இடப்பக்கத்திலும், கிழக்கு- தெற்கு நோக்கி கோவில் இருந்தால் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும். * தரையில் விழுந்து வணங்கும்போது, ஆண்கள் தலை, இரண்டு காதுகள், இரண்டு கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி வணங்க வேண்டும். * பெண்கள் தலை, இரு கைகள், முழங்கால்கள் இவை நிலத்தில் பதியும்படி வணங்க வேண்டும். * மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை நமஸ்காரம் செய்வது நல்லது. * கீழே விழுந்து வணங்கும்போது, கால்கள் கிழக்கு, வடக்கு திசைகளில் நீட்டாதவாறு பார்த்து வணங்க வேண்டும். * கொடி மரத்தை தாண்டி உள்ளே சென்ற பின்னர், எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்க வேண்டாம். * சிவபெருமானை வணங்கியபின்னர், அடிமேல் அடி எடுத்து வைத்து வலம் வரவேண்டும். குறுக்கே நுழையக் கூடாது. * சுற்றி வலம் வரும்போது, வாகனங்களையும் சேர்த்துத் தான் வலம் வர வேண்டும். * ஒரே கோவிலில் உள்ள விநாயகர், முருகன், தேவி சன்னதி களைத் தனித்தனியாக வலம் வரக்கூடாது. அனைத்தையும் சேர்த்து வலம் வரவேண்டும். * வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்தீஸ்வரரை துதித்து உள்ளே செல்ல வேண்டும். * விநாயகரைத் தரிசித்து, பின்னர் சிவபெருமானையும், தேவி யையும் வழிபட்டு, பிறகு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், முருகன் என வரிசையாக வழிபட வேண்டும். அதற்கு பின்னர், வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்றுமுறை கைத்தட்டி வணங்க வேண்டும். * நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசிக்க வேண்டும். * கோவிலில் உள்ள மரங்கள், செடிகளில் இருந்து இலை களையோ, பூக்களையோ எடுத்து வீட்டு வழிபாட்டிற்கோ அல்லது வேறு எதற்கும் அவற்றை பயன்படுத்தக் கூடாது. * மும்மூர்த்திகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது. *** கோவில்களுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை! * நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக செல்ல வேண்டும். * பூக்கள், பழம், வெத்தலை, பாக்கு, தீபம் ஏற்றுவதற்குரிய எண்ணெய், ஊதுபத்தி ஆகியவற்றில் உங்களால் எது முடியுமோ...அதை எடுத்து செல்லலாம். * கோவிலுக்கு செல்லும் போது அடுத்தவர் கண்ணை உறுத்தாத வகையில் உடை உடுத்தவும். குறிப்பாக பெண்கள் எளிமையாக ஆடை அணியவும். * ஆலயத்தில் பலிபீடத்திற்கு முன் நமஸ்காரம் செய்ய வேண்டும். * நமஸ்காரம் செய்யும்போது கால்களை நீட்டும் திசையில் சாமிகளோ அல்லது பெரியவர்களோ இல்லாதவாறு கவனித்து கும்பிடவேண்டும். * திரை போட்டிருந்தாலோ அல்லது கதவு பூட்டப்பட்டிருந்தாலோ சாமி கும்பிட வேண்டாம். * ஒவ்வொரு சன்னதியிலும் அங்குள்ள தெய்வங்களுக்கு உரிய பாடல்கள், மந்திரங்களை சொல்ல வேண்டும். * ஆலயத்துக்குள் தெய்வங்கள் தொடர்பான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். *கோவிலுக்குள் தெய்வங்களைத் தவிர மனிதர்களை கும்பிடக்கூடாது. * கோவிலுக்குள் தெய்வங்களை தரிசனம் செய்யும்போது மற்றவர்களுக்கு மறைக்காமல் ஓரமாக நின்று தரிசிக்க வேண்டும். *** மகாலக்ஷ்மி வாசம் மகாலக்ஷ்மி விடியற்காலையில் ஒவ்வொரு வீட்டிற்கும் தேடி வருகிறாள். அந்த வீட்டுப் பெண்கள் விடியற்காலையில் எழுந்து, குளித்துவிட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் மகாலக்ஷ்மி மிகவும் சந்தோஷப்பட்டு அந்த வீட்டுக்குள் விஜயம் செய்வாள் என்பது ஐதீகம். அப்படி இல்லாமல் இருந்தால் மகாலக்ஷ்மியின் அக்காள் விஜயம் செய்வாள் என்று கூறப்படுகிறது. *** கற்பூரம் இறைவனுக்கு கற்பூரம் காட்டுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம் ஆகும். கற்பூரம் காட்டி வழிபடுவதே சாலச்சிறந்தது! கற்பூரம் ஏற்றும்போது அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளும்போது எதுவுமே மிஞ்சுவதில்லை! அதுபோல் நம் ஆத்மா ஆண்டவன் ஒளியில் எதுவும் மிஞ்சாமல் கறைந்துவிட வேண்டும் என்பதே கற்பூர வழிபாட்டின் நோக்கமாகும். *** விளக்கில் ஒளி ஏற்றுவதற்குரிய பலன்கள் ஒரு முகம் ஏற்றினால் - மத்திய பலன். இருமுகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை. மூன்று முகம் ஏற்றினால் - புத்திர சுகம் கிட்டும். நான்கு முகம் ஏற்றினால் - பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி. ஐந்து முகம் ஏற்றினால் - ஐஸ்வர்யம் பெருகும். *** விளக்கு ஏற்ற வேண்டிய திசைகளின் பலன்கள் கிழக்கு திசை - துன்பங்கள் நீங்கி கிரகப்பீடை விலகும். மேற்கு திசை - கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை நீங்கும். வடக்கு திசை - திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் கிட்டும். தெற்கு திசை - விளக்கேற்றுவது பாவம். *** தீபம் ஏற்றுதல் பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவனையும் வழிபட வேண்டும். வேண்டியது கிடைக்க... நோய்கள் தீர்ந்து குணமாக வேண்டுமானால், இலுப்பை எண்ணையுடன் சிறிது பசு நெய் சேர்த்து தீபமிட்டு வழிபடவேண்டும். தீபம் ஏற்றினால் பாவங்கள் தீரும். புண்ணியம் கிடைக்கும். *** பூஜை செய்யும் பொருட்களால் ஏற்படும் பலன்கள்

வாழைப்பழம் - விவசாயம் பெருகும்.
பலாப்பழம் - தீராத பகை தீரும்.
வாசனைத் திரவியம் - ஆயுளுக்கு தடை வராது
. அன்னம் - சகல செல்வங்களும் சேரும்.
பச்சைக் கற்பூரம் - பயம் நீங்கும்.
தங்கம் - வைராக்கியம் தரும்.
மாம்பழம் - சகலமும் வசியமாகும்.
எலுமிச்சை பழம் - எம பயம் நீங்கும்.
தேங்காய் துருவல் - வேலை வாய்ப்பு கிட்டும்.
பூக்கள் - மகிழ்ச்சி

ஏற்படும். *** நிவேதனம் செய்ய... ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல் திங்கள் - பால் சாதம் செவ்வாய் - வெண்பொங்கல் புதன் - கதம்ப சாதம் வியாழன் - எலுமிச்சம்பழ சாதம் வெள்ளி - பால் பாயாசம் சனி - புளியோதரை அல்லது தேங்காய் சாதம்

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes