- Home Posts filed under இந்து மதம்
யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.
பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் சமுதாய மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய தொகுதியாகும்.
பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதர்கள் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடை முறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.
இவ்வாறு பண்பாடு பற்றிய வரையறைகளை மானிடவியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பெருமள்வுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை வகைப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் அமைவிடம் பற்றியும் புவியியல் பற்றியும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
சில அறிஞர்கள் பண்பாட்டைப் புவியியல் அடிப்படையில் நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக இலங்கை பண்பாடு, இந்திய பண்பாடு , எனக் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டலாம்.
எனினும் இவற்றுக்கிடையே பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பது உணரப்பட்ட போதும் பொதுவாக இவ்வாறு அழைக்கும் வரலாறு இன்று வரை தொடர்கிறது.
பண்பாடு என்பது பன்மைத்தன்மை கொண்டது என்பதையும் மனங்கொள்ள வெண்டும்.
யாழ்ப்பாணப் பிரதேசம் என்னும் பெரு வட்டரத்திற்குள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று முதலிய பகுதிகள் உள்ளடங்குகின்றன.
இப்பிரிவுகளுக்கிடையே பண்பாட்டுக் கோலங்கலிற் சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் அல்லது தனித்தன்மைகள் காணப்படுவது உண்மையே.
எனினும் எல்லாப் பிரிவுகளுக்கும் உரித்தான பொதுவான பண்பாட்டு அம்சங்களையே இவ்வுரையில் குறிப்பிடுகின்றோம்.
பண்பாடு என்ற சொல் வாழ்க்கை முறை அல்லது வாழ்வியல் என்ற அர்த்தத்திலும் பயின்று வருகிறது.
தமிழிலே பண்பாடு என்ற சொற்பயன்பாடு மிக அண்மைக்காலத்திலேயே அறிமுகமானது. Culture என்ற ஆங்கிலப் பதத்திற்கு நாகரிகம் என்ற சொல்லே பெரு வழக்கமாக இருந்தது.
பழந்தமிழ் இலக்கியங்களிற் பண்பாட்டினை குறிக்கச் சால்பு என்ற பதமே கையாளப்பட்டுள்ளது என்பர். Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல் மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. வாழ்வியல் அல்லது வாழ்க்கை முறைகள் எனப்பன்மையிலே சுட்டுவதும் பண்பாட்டின் பன்மைத்தன்மையை மனங்கொண்டே எனக் கருதலாம்.
பண்பாடு என்ற சொற்பொருள் வியாக்கியானம் இவ்வுரைக்கு முக்கியமானது அல்ல. எனினும் ஒரு முன்னீடாக இதனைக் குறிப்பிட்டோம்.
பண்பாடு பற்றிய ஆய்வினைச் செய்தவர்கள் பண்பாட்டை பொருள் சார் பண்பாடு, பொருள் சாராத பண்பாடு என இரண்டாகப் பாகுபாடு செய்வார். ஆய்வு வசதிக்காக இவ்வாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ள போதும் பொருள்சார் பண்பாடும் பொருள் சாராத பண்பாடும் ஒரே வழி ஒன்றிணைந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு சமுதாயப் பண்பாட்டு முறையை தெளிவாக அறிந்து கொள்ள முதலிலே பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியமெனப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர் பக்தவற்சலபாரதி பொருள்சார் பண்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
ஆய்வு செய்யும் சமூகத்தின் பொருள் சார் பண்பாட்டினைப் பற்றிய தரவுகள் மிகவும் பயனுள்ளவை. வீடுகளின் அமைப்பு, செய்பொருள்கள், வீட்டுச்சாமான்கள், உடைகள், அணிகலன்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கால்நடைகள், தொழிற்கருவிகள், சடங்குப் பொருள்கள் போன்ற பல்வேறு வகையான பொருள்களைப் பற்றிய தரவுகள் சமுதாயப் பண்பாட்டு முறைகளை அறியப் பெரிதும் உதவும்.
இந்த வகையிலே நோக்கும் போது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருள்சார் பண்பாடுகள் யாவற்றையும் இவ்வுரையிலே விரித்துக் கூறுவது கடினமானது. குறிப்பிட்ட சில பொதுமைப்பண்புள்ள அதேவேளை முக்கியமானவை எனக் கருதும் பண்பாட்டுக் கோலங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இங்கு நான் சுட்டிக்காட்டப்போகும் பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றை நாம் இழந்து விட்டோம். சிலவற்றை மாற்ருவத்தோடு பேணி வருகின்றோம். இன்னும் சிலவற்றை 'பொய்யாய், பழங்கதையாய், கனவாய்' மெல்ல மெல்ல போக விட்டு விட்டோம். பண்பாடு என்பது ஒரு ஓட்டம். அது இயங்கியற் சாத்தியமுடையது. அது மாறுவது அல்லது மாற்றப்படுவது தவிர்க்க முடியாத்து. பண்பாடு என்பது மாறாத தன்மை கொண்டது என்ற கருத்தியலாளர்களும் உளர்.
பண்பாடு மாறுவதற்கு அல்லது மாற்றுருப் பெறுவதற்கு அல்லது மறைவதற்குப் பல காரணிகள் உள்ளன. சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று மாற்றங்களும் இம்மாற்றங்களால் உருவான கல்வி, தொழில், உலகத் தொடர்புகள் முதலானவையும் , பண்பாட்டைக் கொள்ளலும் கொடுத்தலும் என்ற பரிமாற்ற முறையும் இந்நிலைக்கு பிரதான காரணிகள் எனலாம்.
19 ஆம் நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியையும் ஆதாரமாகக் கொண்டே யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை இங்கு சுட்டிச் செல்லலாம் என எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பென்பது அடிப்படையில் அதிகார அடுக்குகளை உடையது. இந்த அதிகார அடுக்கு முறை என்பது சாதிகளை அடிப்படையாகக் கொண்டது. யாழ்ப்பாணப் பாரம்பரிய சமூக அமைப்பென்பது பௌதீக ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வேளாள முதன்மை உடையது. குடித்தொகையிலும் ஏனைய சாதியினரை விட வேளாளர்களே அதிகமாக காணப்படுகின்றனர். அத்துடன் காலனிய ஆட்சியும் வேளாளர்களது சமூக மேலாண்மையை பலப்படுத்துவதாகவே அடிப்படையில் இருந்தது. ஒல்லாந்த, ரோமன் , டச்சுச் சட்டம் முதல் காலனிய ஆட்சியுடன் முன்னணிபெற்ற புகையிலை முதலான காசுப் பயிர்களின் செய்கை, கல்வி, நிர்வாகம் முதலியன யாவும் அடிப்படையில் அமைந்ததை அவதானிக்க முடியும்.
இவ்வாறு யாழ்ப்பாணச் சமூக அமைப்புப் பற்றி அகிலன் குறிப்பிடுவது மிகுந்த அவதானிப்புக்குரியது. இந்த நீண்ட மேற்கோளை உறுதி செய்வதாக அதிகம் கவனிப்புக்குட்படாத எழுத்து இலக்கியங்களும், அரை வாய் மொழிப் பாடல்களும் நாட்டுப் பாடல்களும் செவிவழிக்கதைகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை சாதி, சமூக அதிகார அடுக்குகளின் அடிப்படையிலும் நோக்குவது தவிர்க்க முடியாதது. விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுடன் ஒன்று அத்து ப்பட்டுள்ளதை புலமைத்துவ நோக்கில் நிராகரிப்பது கடினமானது.
யாழ்ப்பாணத்தின் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளை முதலில் நோக்குவோம். பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டு ஆராய்வது இவ்வுரையிலே சாத்தியமற்றது. பொதுவான முதன்மையான பண்பாட்டுக்கோலங்கள் சிலவற்றையே குறிப்பிட்டு விளக்க முனைகிறேன். யாழ்ப்பாணத்துப் பொருள்சார் பண்பாடுகளில் உணவு ,உடை, உறையுள், போக்குவரத்து, புழங்கு பொருட்கள், அணிகலன்கள் முதலியவற்றைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன்.
அர்த்தமுள்ள திருமணம்
திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.
புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.
வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.
தாரை வார்த்தல்:
பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.
அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.
மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.
தாலி கட்டுதல் :
தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'
ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.
'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.
இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.
தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.
மெட்டி அணிவித்தல் :
திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.
வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.
ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.
அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.
அம்மி மிதித்தல் :
உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.
அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.
கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.
'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'
அருந்ததி காட்டல் :
அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.
எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.
இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
'அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'
தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்
நன்றி : யாழ் மண்
மார்கழி நோன்பு

மார்கழி சிறப்பு
மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாககொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்."கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்றபெயர் ஏற்பட்டதாக புராணம் கூறும். திருமாலின் திருவாயிரப்பேர்தொடுப்பிலும் (சகஸ்ரநாமாவளி) "கேசி" என்னும் பெயர் இருக்கும். இந்தத் திருவாயிரத்திற்கு ஆதி ஆண்டும். கேசமுடையவன் "கேசி".அதுபோலத்தான் "மது கைடபர்"களை அழித்தலால்"மாதவன்" என்ற பெயர் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட புராணம் கூறும்.சங்கத் தொகைநூலானதும் இந்தியாவிலேயே தமிழிசையில் (கருநாடகவிசை) அமைக்கப்பட்ட இசைப்பாடல்களில் மிகத்தொன்மையானதுமான பரிபாடலின் பாடல் கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்எரிசினம் கொன்றோய்நின் புகழுரு வினகைநகையச் சாக நல்லமிர்து கலந்தநடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை!இருகை மாஅல்!முக்கை முனிவ! நாற்கை யண்ணல்!ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்! எழுகை யாள! எண்கை ஏந்தல்!ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள!பதிற்றுக்கை மதவலி! நூற்றுக்கை யாற்றல்!ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள!பதினா யிரங்கை முதுமொழி முதல்வ!நூறா யிரங்கை ஆறறி கடவுள்!அனைத்தும் அல்லபல அடுக்கிய ஆம்பல்இனைத்தென எண்வரம் பறியா யாக்கையை!நின்னைப் புரைநினைக்கின் நீயல(து) உணர்தியோ!" என்னும் மிக அழகிய பகுதியில் வருவதைக் காண்க.["கூந்தல் என்னும் பெயர்கொண்ட கூந்தல் செறிந்த தலையையுடையஅவுணனின் வெஞ்சினத்தை யொழித்த நின் கைகள் புகழுடையன"]அ·து வடமொழியிற் கூந்தல் = முடி = கேசம் என்பட கேசவன் என்றாயது.மேற்கண்டாவாறு மிக அழகான துதிப்பாடல்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரேநம்முன்னோர் இயற்றியுள்ளார்கள். அவற்றைப் படித்து நடைமுறையில் இறைவழிபாட்டிற்குப்பயன்படுத்த வேண்டியது நம் கடமை. அப்பொழுதுதான் தமிழ்ப்பண்பாடு உண்மையாகவே வாழ வகைசெய்ய வியலும்; அவை உயர்ந்த மந்திரங்களும் ஆகும்;பார்ப்பதற்கு முதலில் கடினமாகத் தோன்றிடினும் பழகியவுடன் அவற்றின் இனிமை தெரியும்;தமிழின் இனிமையும் அவற்றிலுள்ள உணர்ச்சிகரமான பண்பும் விளங்கும்; மேற்காட்டியதுதிருப்பெயர்மாலைக்கு நல்ல சான்று. பெயருருட்டிற்கு (நாம்ஜபம்) மிகவும் பொருந்தும்]கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்று பொருள். மார்கழி மாதத்திற்குஇப் பெயர் இட்டிருக்கும் காரணம் , இம்மாதம் மனிதனுக்கு அறிவை தருகிறது என்றநம்பிக்கையே ஆகும்.அத்தோடு மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காகசெய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரைஅன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது.மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள். இத்துணை காரணங்களால் மார்கழி சிறப்பு மாதம் சிறப்பு பெறுகிறது.
சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை
சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.
அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதும¨ அடைந்துவிடுவீர்கள்.
மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.
குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.
இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.
உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.
வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.
வெப்துனியா
விநாயகரும் விஞ்ஞான உட் பொருளும்
இந்து சமயம் போற்றும் கடவுள் திருவுருவங் கள் அனைத்தும் மிக உயர்ந்த உட்கருத்தினை உணர்த்தும் வடிவங்களாகவே அமைந்துள்ளன. விஞ்ஞான நோக்கில் பார்க்கும் பொழுதும், அத்திரு வடிவங்கள் எவ்வளவு உயர்ந்த தெய்வீக உட்கருத்துகளையும்- விஞ்ஞானக் கோட்பாடு களையும் மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளன என்பது விளங்குகின்றது.
விஞ்ஞான நோக்கில் விநாயகர் உருவினைப் பார்க்கும்பொழுது, அத்திருவுருவம் இன்று உலகெங்கும் போற்றப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாத தேவையினை வலியுறுத்தும் வடிவாகவே விளங்குகின்றது. மனிதனின் நல்வாழ்விற்கு மிருகங்களும் பிற அஃறிணை உயிரினங்களும் பெரிதும் உதவுகின்றன. ஆகையால் மனிதன் மிருகங்களையும் பறவை களையும், அவை அழிவுபடாத வகையில் பேணிப் பாதுகாத்தல் வேண்டும். அவற்றிடம் அவன் இரக்க முடையவனாகவும் இருத்தல் வேண்டும். இன்று உலகின் எல்லா நாடுகளிலும் மிருகங்களையும் பறவைகளையும் பாதுகாப்பதற்கான செயல் முறைகள் முனைந்து மேற்கொள்ளப்படுகின்றன. மிருகங்களில் பெரிதான யானையின் தலையும் மனித உடலும் அழகுற அமைந்த விநாயக மூர்த்தம், மக்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே தேவை யான வாழ்முறை ஒருமைப்பாட்டினை (Ecological balance, integration and unity) உணர்த்தும் பெரிய தத்துவ தெய்வமாகவே விளங்குகிறது.
மேலும், புலால் மறுத்தலின் தேவையினையும், சைவ உணவின் மேன்மையினையும் யானை முகம் குறிப்பால் உணர்த்துவதாகவும் உள்ளது. மிருகங்களில் யானை கம்பீரத் தோற்றம் உடையது. அயராத உழைப்பு, திடபலம், அறிவு முதலியவை அமையப் பெற்றது. இத்தகைய மேன்மைகளுடன் அளவிடற்கரிய சக்தியின் அரிய உருவமாக விளங் கும் யானை உண்பது தாவர உணவினைத்தான்! அந்த யானையின் பிளிறுதலில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தினையும் கேட்கலாம். இவ்வகையில் மக்களுக்கும் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் இடையே தேவையான வாழ்முறை கட்டுப்பாடும் ஒருமைப்பாடும் (Proper balance and Control between the animal kingdom and the plant kingdom) இருத்தல் வேண்டும் என்ற விஞ்ஞானக் கோட்பாட்டினை உணர்த்தும் மூர்த்தமாகவும் விநாயகர் விளங்கு கின்றார்.
சமய வழிபாட்டில் முதல் வழிபாடு விநாயக மூர்த்திக்கே. மக்களின் முதற்கடமை ஒருமைப் பாட்டு உணர்வினைப் போற்றுதலேயாகும்.
ஓங்கார வடிவமான விநாயகரின் திருவுருவம் ஒருமைப்பாட்டின் தெய்வீக உருவம். ஓங்காரம் எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் அமைந்தது. அது அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. ஓங்காரம்- படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் இயற்றவல்லது. எச்செயலையும் தடைகள் இல்லாமல் வெற்றியுடன் முடிப்பதற்கு- அச்செயலைத் தொடங்குவதற்கு முன்னர் முதற்கண் வழிபடப் பெறும் கடவுள் ஒருமைப்பாட்டு உருவினரான விநாயகரே.
ஆண்- பெண் ஒருமைப்பாடு
ஒருமைப்பாடு எங்கும் எதிலும் வேண்டும். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அது வியாபித் திருக்க வேண்டும். ஆணின்றி பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணில்லை. "சக்தியும் சிவமுமாந் தன்மை இவ்வுலகமெல்லாம்' என்கிறார் சிவஞான சித்தியார். விநாயக மூர்த்தம் இதனை அழகுற வெளிப்படுத்துகிறது. அதில் தந்தமுள்ள பகுதி ஆண் கூறு; தந்தமில்லாத பகுதி பெண் கூறு. இவ்வாறு விநாயக மூர்த்தத்தில் ஆண்- பெண் என்ற இரு கூறுகள், ஆண்- பெண் ஒருமைப்பாட் டின் இன்றியமையாத தன்மையை வலியுறுத்தி விளக்குகின்றது.
தொழில்களில் ஒருமைப்பாடு
உலகில் நிகழும் எல்லாச் செயல்களும் படைத் தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்ற ஐந்து பெரும் தொழில்களில் அடங்கும். விநாயகரின் ஐந்து கரங்களில் அமைந்துள்ள ஐந்து பொருட்களும் இந்த ஐந்து தொழில்களை உணர்த்துவதாகவே உள்ளன. ஒரு கரத்தில் ஏந்தியுள்ள "பாசம்' படைத்தல் தொழிலைப் புலப்படுத்தும். "பாசம்' பிறவிக்கு வழிகோலுகின்றது அல்லவா? ஒற்றைக் கொம்போ காத்தல் தொழிலைக் காட்டும். துதிக்கை மறைத்தல் தொழிலைத் தெரிவிக்கும். அங்குசம் அழித்தல் தொழிலைக் காட்டும். மோதகம் அருளல் தொழிலை அறிவிக்கும். ஐந்தொழில்களையும் அளவோடு ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்தும் அழகிய ஞானமூர்த்தமே ஐங்கரத்து விநாயகர்.
ஞானத்தில் ஒருமைப்பாடு
விநாயக மூர்த்தம் ஞான சொரூபம். அது பரஞானம், அபரஞானம் ஆகிய இரண்டினையும் அறிவிக்கும் குறிகளைக் கொண்ட அழகிய மூர்த்தம். அதனுடைய ஒடிந்த கொம்பு அபர ஞானத்தைக் குறிக்கும். ஒடியாத முழுமையான கொம்பு பர ஞானத்தைக் குறிக்கும். இஃதன்றி பதிஞானம், பாசஞானம் ஆகியவற்றினைக் குறிப்பதாகவும் அமையும். பாசஞான நூலான பாரதம் எழுதத் துணை செய்தது ஒடிக்கப் பெற்ற கொம்பு. பாசஞானம் கலைஞானமாகி, சிவஞானத் திற்கு வழிகோலும் உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம், திருப்பெருகும் சிவஞானம் என்ற மும்மதத்தினையும் ஒருங் கிணைத்த ஞான மதத்தின் ஒப்பற்ற தலைவராக விநாயகக் கடவுள் விளங்குகிறார்.
சமயங்களில் ஒருமைப்பாடு
சமய பேதங்களைக் கடந்து சைவர்க்கும் வைணவர்க்கும் வழிபடு கடவுளாக விளங்குபவர் விநாயகர்.
மேலும் விநாயக மூர்த்தம் ஒன்றை வழிபட்டால் போதும்- சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய பெரும் தெய்வங்களை வழிபட்ட பலன் கிட்டும். ஏனெனில், அத்தெய்வங்களின் அம்சங்கள் விநாயகர் திருவுருவில் அமைந்துள்ளன. விநாயகரின் நாபி பிரம்ம சொரூபமாக விளங்குகின்றது. திருமுகம் திருமாலின் அம்சம். முக்கண் சிவ அம்சம். இடப்பாகம் சக்தி வடிவம்; வலப்பாகம் சூரிய அம்சம். ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங் களிலும் விநாயகர் வழிபாடு உண்டு.
வழிபாட்டில் ஒருமைப்பாடு
வெள்ளெருக்கு முதல் கருங்கல் வரை பேதமின்றி பல பொருட்களைக் கொண்டும் விநாயகர் வடிவம் செய்து வழிபடலாம். வெள்ளெருக்கு, மஞ்சள், சந்தனம், மலர், மரம், சுதை மண், கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு போன்ற பல பொருட்கள் விநாயகர் வடிவம் அமைக்கப் பயன்படுகின்றன. விநாயக சதுர்த்தியன்று மண்ணினால் செய்த விநாயகர் வடிவினை அனைவரும் வழிபடுவர்.
அன்பு கணபதி இல்லாத இடமே இல்லை. எங்கும் எவர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டப்படுவதெல்லாம் அன்பு ஒன்று தான். அன்பு வழிபாட்டில் மக்கள் அனைவரை யும் ஒன்றுபடுத்துகிறார் விநாயகப் பெருமான்.
காலம், இடம் கடந்த ஒருமைப்பாடு
காலம், இடமெல்லாம் கடந்து நிற்பவர் கணபதி. ஓங்காரம் அநாதி. அதற்குக் காலம் கற்பித்தல் முடியாது. ஆகையால் ஓங்கார வடிவினரான விநாயகரும் அநாதி. பல காலங்களையும் விநாயகர் பிணைத்து நிற்பதை வேதங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன. வேதகாலத்தி லேயே விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு
விநாயக சதுர்த்தியன்று மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவினையே பெரும்பாலோர் விரும்பி வழிபடுகின்றனர். இது பிறந்த மண்ணை- பிறந்த பொன்னாட்டைப் போற்றுதல் வேண்டும் என்ற உட்குறிப்பினைக் கொண்டது போலும்! "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றார் மகாகவி பாரதி. விநாயகர் வழிபாட்டில் ஒருங்கிணைந்த தெய்வபக்தி தேசபக்தியாகப் பரிமளிக்கிறது. நாடெங்கும் மக்களால் கொண்டாடப் பெறும் விநாயக சதுர்த்தி விழா தேசிய விழாவாக மலர்ந்து, தேசபக்தியினையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஓங்கச் செய்கின்றது. நமது நாட்டின் விடுதலைப் போரில் மக்களை ஒருங்கிணைக்க, மகாராஷ்டிரம் விநாயக சதுர்த்தி விழாவினைத் தேசிய விழாவாகவே மேற்கொண்டது. விடுதலை வீரரான பாலகங்காதர திலகர் போன்ற பெருந்தலைவர்கள் விநாயக சதுர்த்தியை தேசிய விழாவாக வெற்றி பெறச் செய்தனர்.
இயற்கை ஒருமைப்பாடு
பூமி விளைந்தால்தான் நாட்டில் பஞ்சம் இருக்காது. நல்ல விளைச்சலுக்கு மண்வளம் வேண்டும். மண்ணினால் அமைந்த விநாயகர் திருவுருவம் மண்வளம் பாதுகாக்கப்படுதல் வேண்டும்; போற்றப்படுதல் வேண்டும் என்பதனை அறிவுறுத்துவதாக உள்ளது. மேலும், நிலமும் நீரும் தக்கவாறு ஒருங்கிணைந்தால்தான் நல்ல விளைச்சல் உண்டாகும். நிலத்தையும் நீரையும் தக்க அளவில், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று இன்று விஞ்ஞானிகள் வெகுவாக வலியுறுத்துகின்றனர். இந்த சிறந்த விஞ்ஞானக் கருத்தினையே- மண்ணில் செய்த விநாயகர் உருவினை- சதுர்த்தி விழாவிற்குப் பிறகு பூரணமாக நீரில் கரைத்தல் உணர்த்து கின்றது.
நக்கிரன் டாட் காம்
அபிஷேகம் செய்வதன் நன்மைகள்
இறைவனுக்கு அபிஷேகம் செய்தல் என்பது வழிபாட்டில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதோ உங்களுக்காக அபிஷேகம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் : * தூய்மையான நீரால் அபிஷேகம் செய்தால், நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும். * நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதன் மூலம், நம் வாழ்க்கை சுவை மிகுந்ததாகவும், சுகம் நிறைந்ததாகவும் அமையும். * பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் சிறப்புடன் காணப்படும். அத்துட்டன், தேவையான செல்வங்களும் சேரும். * பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தியும், இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப நலனும் ஏற்படும். * பசுவின் பால், தயிர், நெய், கோமயம், சாணம் ஆகியவை அடங்கிய பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நிவர்த்தியாகும். * நெல்லி முள்ளைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால், நோய்கள் நீங்கப் பெறுவோம்; தேனில் அபிஷேகம் செய்தால் வாழக்கை இன்பமயமாகும். * வாழைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும்; அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வைப் பெறுவோம். * சந்தனத்தினால் அபிஷேகம் செய்வோமாயின் எட்டுவித செல்வங்களைப் பெறுவோம். இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை தெரிந்து கொள்ளும் அதேவேளையில், அபிஷேகம் செய்வதற்கான உகந்த கிழமைகளையும் அறிந்து கொண்டு செயல்படுவோமாயின் மேலும் நன்மை விளையும். ஞாயிற்றுக்கிழமை விநாயகர் மற்றும் நவ கிரகங்களுக்கும், திங்கட் கிழமை சிவ பெருமானுக்கும் அபிஷேகம் செய்தல் வேண்டும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் முறையே முருகன், விஷ்ணு, தட்சிணா மூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் சனிக்கிழமை கண்ணபிரான் மற்றும் அவரது அவதாரங்களுக்கும் அபிஷேகம் செய்தல் நன்மை பயக்கும். திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை: கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும். * பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது * வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது * கோயிலுக்குள் தூங்கக் கூடாது * கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது * விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது * ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது * மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது * கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது * சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது * ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது * சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது * மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது. * கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது, * அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இலைகளை பறிக்க கூடாது.
இல்லறத்தில் ஆன்மீகம்
இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.
எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.
"காடே தி¡¢ந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்ல
நாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நா¡¢யர் பால்
வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததை ஒழித்துவிடின் -
இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மன்னாளும் மன்னர்கள்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :
"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.
எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்
செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.
அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு
தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை
விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை.
'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'
என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.
கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவதெவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சா¢யாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லா¡¢னும்
தலை சிறந்தவன்.
"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பா¡¢ன் நோன்மை உடைத்து"
சா¢யான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சா¢யாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.
எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,
சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பொ¢யபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்.
"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.
இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்கு
வழிவகுக்கும் என்பதை அறியலாம்.
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.
சிவாலய வழிபாட்டு முறைகள்
சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை உடுத்தி தூய்மையாக செல்ல வேண்டும். * கோவிலுக்கு அருகே செல்லும் போதே கோபுரத்தை தரிசித்து, சிவாய நாமங்களை உச்சரித்தவாறே உள்ளே போக வேண்டும். * பலி பீடத்தையும், கொடி மரத்தையும், நந்தீஸ்வரையும் கும்பிட வேண்டும். * வடக்கு, மேற்கு நோக்கிய கோவிலாக இருந்தால் இடப்பக்கத்திலும், கிழக்கு- தெற்கு நோக்கி கோவில் இருந்தால் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும். * தரையில் விழுந்து வணங்கும்போது, ஆண்கள் தலை, இரண்டு காதுகள், இரண்டு கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி வணங்க வேண்டும். * பெண்கள் தலை, இரு கைகள், முழங்கால்கள் இவை நிலத்தில் பதியும்படி வணங்க வேண்டும். * மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை நமஸ்காரம் செய்வது நல்லது. * கீழே விழுந்து வணங்கும்போது, கால்கள் கிழக்கு, வடக்கு திசைகளில் நீட்டாதவாறு பார்த்து வணங்க வேண்டும். * கொடி மரத்தை தாண்டி உள்ளே சென்ற பின்னர், எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்க வேண்டாம். * சிவபெருமானை வணங்கியபின்னர், அடிமேல் அடி எடுத்து வைத்து வலம் வரவேண்டும். குறுக்கே நுழையக் கூடாது. * சுற்றி வலம் வரும்போது, வாகனங்களையும் சேர்த்துத் தான் வலம் வர வேண்டும். * ஒரே கோவிலில் உள்ள விநாயகர், முருகன், தேவி சன்னதி களைத் தனித்தனியாக வலம் வரக்கூடாது. அனைத்தையும் சேர்த்து வலம் வரவேண்டும். * வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்தீஸ்வரரை துதித்து உள்ளே செல்ல வேண்டும். * விநாயகரைத் தரிசித்து, பின்னர் சிவபெருமானையும், தேவி யையும் வழிபட்டு, பிறகு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், முருகன் என வரிசையாக வழிபட வேண்டும். அதற்கு பின்னர், வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்றுமுறை கைத்தட்டி வணங்க வேண்டும். * நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசிக்க வேண்டும். * கோவிலில் உள்ள மரங்கள், செடிகளில் இருந்து இலை களையோ, பூக்களையோ எடுத்து வீட்டு வழிபாட்டிற்கோ அல்லது வேறு எதற்கும் அவற்றை பயன்படுத்தக் கூடாது. * மும்மூர்த்திகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது. *** கோவில்களுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை! * நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக செல்ல வேண்டும். * பூக்கள், பழம், வெத்தலை, பாக்கு, தீபம் ஏற்றுவதற்குரிய எண்ணெய், ஊதுபத்தி ஆகியவற்றில் உங்களால் எது முடியுமோ...அதை எடுத்து செல்லலாம். * கோவிலுக்கு செல்லும் போது அடுத்தவர் கண்ணை உறுத்தாத வகையில் உடை உடுத்தவும். குறிப்பாக பெண்கள் எளிமையாக ஆடை அணியவும். * ஆலயத்தில் பலிபீடத்திற்கு முன் நமஸ்காரம் செய்ய வேண்டும். * நமஸ்காரம் செய்யும்போது கால்களை நீட்டும் திசையில் சாமிகளோ அல்லது பெரியவர்களோ இல்லாதவாறு கவனித்து கும்பிடவேண்டும். * திரை போட்டிருந்தாலோ அல்லது கதவு பூட்டப்பட்டிருந்தாலோ சாமி கும்பிட வேண்டாம். * ஒவ்வொரு சன்னதியிலும் அங்குள்ள தெய்வங்களுக்கு உரிய பாடல்கள், மந்திரங்களை சொல்ல வேண்டும். * ஆலயத்துக்குள் தெய்வங்கள் தொடர்பான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். *கோவிலுக்குள் தெய்வங்களைத் தவிர மனிதர்களை கும்பிடக்கூடாது. * கோவிலுக்குள் தெய்வங்களை தரிசனம் செய்யும்போது மற்றவர்களுக்கு மறைக்காமல் ஓரமாக நின்று தரிசிக்க வேண்டும். *** மகாலக்ஷ்மி வாசம் மகாலக்ஷ்மி விடியற்காலையில் ஒவ்வொரு வீட்டிற்கும் தேடி வருகிறாள். அந்த வீட்டுப் பெண்கள் விடியற்காலையில் எழுந்து, குளித்துவிட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் மகாலக்ஷ்மி மிகவும் சந்தோஷப்பட்டு அந்த வீட்டுக்குள் விஜயம் செய்வாள் என்பது ஐதீகம். அப்படி இல்லாமல் இருந்தால் மகாலக்ஷ்மியின் அக்காள் விஜயம் செய்வாள் என்று கூறப்படுகிறது. *** கற்பூரம் இறைவனுக்கு கற்பூரம் காட்டுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம் ஆகும். கற்பூரம் காட்டி வழிபடுவதே சாலச்சிறந்தது! கற்பூரம் ஏற்றும்போது அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளும்போது எதுவுமே மிஞ்சுவதில்லை! அதுபோல் நம் ஆத்மா ஆண்டவன் ஒளியில் எதுவும் மிஞ்சாமல் கறைந்துவிட வேண்டும் என்பதே கற்பூர வழிபாட்டின் நோக்கமாகும். *** விளக்கில் ஒளி ஏற்றுவதற்குரிய பலன்கள் ஒரு முகம் ஏற்றினால் - மத்திய பலன். இருமுகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை. மூன்று முகம் ஏற்றினால் - புத்திர சுகம் கிட்டும். நான்கு முகம் ஏற்றினால் - பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி. ஐந்து முகம் ஏற்றினால் - ஐஸ்வர்யம் பெருகும். *** விளக்கு ஏற்ற வேண்டிய திசைகளின் பலன்கள் கிழக்கு திசை - துன்பங்கள் நீங்கி கிரகப்பீடை விலகும். மேற்கு திசை - கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை நீங்கும். வடக்கு திசை - திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் கிட்டும். தெற்கு திசை - விளக்கேற்றுவது பாவம். *** தீபம் ஏற்றுதல் பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவனையும் வழிபட வேண்டும். வேண்டியது கிடைக்க... நோய்கள் தீர்ந்து குணமாக வேண்டுமானால், இலுப்பை எண்ணையுடன் சிறிது பசு நெய் சேர்த்து தீபமிட்டு வழிபடவேண்டும். தீபம் ஏற்றினால் பாவங்கள் தீரும். புண்ணியம் கிடைக்கும். *** பூஜை செய்யும் பொருட்களால் ஏற்படும் பலன்கள்
வாழைப்பழம் - விவசாயம் பெருகும்.
பலாப்பழம் - தீராத பகை தீரும்.
வாசனைத் திரவியம் - ஆயுளுக்கு தடை வராது
. அன்னம் - சகல செல்வங்களும் சேரும்.
பச்சைக் கற்பூரம் - பயம் நீங்கும்.
தங்கம் - வைராக்கியம் தரும்.
மாம்பழம் - சகலமும் வசியமாகும்.
எலுமிச்சை பழம் - எம பயம் நீங்கும்.
தேங்காய் துருவல் - வேலை வாய்ப்பு கிட்டும்.
பூக்கள் - மகிழ்ச்சி
ஏற்படும். *** நிவேதனம் செய்ய... ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல் திங்கள் - பால் சாதம் செவ்வாய் - வெண்பொங்கல் புதன் - கதம்ப சாதம் வியாழன் - எலுமிச்சம்பழ சாதம் வெள்ளி - பால் பாயாசம் சனி - புளியோதரை அல்லது தேங்காய் சாதம்
தீபாவளி வந்த காரணம்
* இறைவன் மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுக்க வேண்டி நேர்ந்தது. இதனைத் தசாவதாரம் என்பார்கள். * முதலாவது அவதாரம் மச்சம் எனப்படும் மீனின் அவதாரம். இரண்டாவது அவதாரம் கூர்மம் எனப்படும் ஆமை அவதாரம். மூன்றாவது அவதாரம் வராகம் எனப்படும் பன்றி அவதாரம். * இவரை வராக மூர்த்தி என்றும் பூவராகன் என்றும் அழைத்தனர். அப்போது தன்னைக் காப்பாற்றிய இறைவனான திருமாலின் அருள் பெருக்கை வியந்து அவர் மேல் காதலானாள் பூமாதேவி. வராகரும் பூமாதேவியின் மேல் மையல் கொண்டார். எனவே, இருவரும் மணந்து கொண்டனர். * அவர்களுக்கு அற்புதமான ஒரு குழந்தை பிறந்தது. அவனுடைய பெயர் நரகன். அசுரத் தன்மையுடன் கூடியவனாக நரகன் விளங்கினான். எனவே, பிற உயிர்களைக் கொடுமையிலும் கொடுமை செய்து வந்தான். * நாளாக, ஆக அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போயின. அந்த நேரத்தில் திருமாலின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் தோன்றி இருந்தார். * நரகாசுரனிடம் தாங்கள் படும் கொடுமைகள் குறித்து அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களைத் தாம் காப்பாற்றுவதாக வாக்களித்தார் திருமாலான கிருஷ்ணர். * அந்த நாளில் சத்ராஜித்து என்ற மன்னனுடைய மகளாகப் பூமாதேவி தோன்றி இருந்தாள். அவளுடைய பெயர் சத்யபாமா. * சத்ராஜித்துவிடம் அற்புதமான ஒரு மணி இருந்தது. அது நரியனால் தரப்பட்ட மணி. அதன் பெயர் "ஸ்யமந்தகம்.' ஒருமுறை சத்ராஜித்துவிடம் அந்த மணியைத் தனக்குத் தருமாறு கேட்டார் கிருஷ்ணர். அவன் மறுத்து விட்டான். * பின்னொரு நாளில் சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்கு சென்றபோது அவனை ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கத்தை ராம பக்தரான ஜாம்பவான் கொன்று ஸ்யமந்தக மணியைக் கைப்பற்றி, தன் புத்திரி ஜாம்பவதிக்குப் பரிசாகத் தந்திருந்தார். * தன் தம்பியைத் தேடி காணாத சத்ராஜித்து அவனைத் தேடி காட்டிற்கு சென்ற போது அவனது இறந்த உடலை மட்டுமே காண முடிந்தது. * எனவே, மணியின் மேல் ஆசை கொண்ட கிருஷ்ணரே தன் தம்பியைக் கொன்றார் என்று பழி சுமத்தினான் மன்னன். * கிருஷ்ணர் தம் பழியைப் போக்கிக் கொள்ள மணியைத் தேடிக் காட்டிற்குள் புகுந்து ஜாம்பவதியைக் கண்டார். ஜாம்பவானும் கிருஷ்ணரும் போராடிய பின்னர் கிருஷ்ணரே ராமர். ராமரே கிருஷ்ணர் என்று உணரப்பட்டு ஜாம்பவதியுடன், அந்த மணியையும் ஒப்படைத்தார் ஜாம்பவான். ஜாம்பவதியைத் திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் சத்ராஜித் நாடு சென்று நடந்த விவரங்களைக் கூறி மணியை அவனிடம் ஒப்படைத்தார். * கிருஷ்ணரின் நேர்மையை மெச்சிய மன்னன் தன் புதல்வி சத்யபாமாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். * சத்யபாமா தேரோட்டுவதில் கெட்டிக்காரி. எனவே, நரகாசுரனுடன் போரிடும் போது தனக்கு அற்புதமான ரத சாரதி வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் சத்யபாமாவையே ரத சாரதியாக்கி நரகன் மேல் போர் தொடுத்தார். * இதற்கு இன்னொரு காரணம் இருந்தது. தன்னுடைய தாயாரின் கையினாலேயே தன் மரணம் நிகழவேண்டும் என்று நரகன் வரம் கேட்டிருந்தான். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். * நரகனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் போர் நடைபெற்றது. நரகனின் கூரிய அம்பு ஒன்றினால் மயக்கமடைந்தார் கிருஷ்ணர். தன் கணவர் தாக்கப்பட்டது கண்டு வெகுண்ட சத்யபாமா, கணவருக்கு பதில் தானே நரகனுடன் போரிட்டாள். * போரில் நரகன் படுகாயமடைந்து கீழே விழுந்தான். அவன் உயிர் ஊசலாடியது. இந்த நேரத்தில், வந்திருப்பவள் தன் தாய் என்பதை உணர்ந்து கொண்ட நரகன், தன் பெற்றோரைக் கையெடுத்து வணங்கினான். * கிருஷ்ணரும், சத்யபாமாவும் அவனருகே கருணை பொழிய வந்து நின்றனர். * ""நீங்கள் இருவரும் என் தாய், தந்தையர் என்பதை நான் உணர்ந்தேன். தெரியாமல் நான் அரிய, பெரிய பாவங்களைச் செய்து விட்டேன். என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்!'' என்று வேண்டினான் நரகன். * ""குழந்தாய், உனக்கு வேண்டிய வரம் யாது?'' என்று கேட்டார் கிருஷ்ணர். * ""நான் கொடியவன் ஆகையால் நான் உயிர் விடவே விரும்புகிறேன். நான் உயிர் விடும் இந்நாளை மக்கள் எல்லாரும் விரும்பிக் கொண்டாடி மகிழ்வர். அக்கொண்டாட்டம் இன்றுடன் நின்று விடக் கூடாது. ஒவ்வொர் ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடும்படி தாங்கள் அருளவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான் நரகன். * கிருஷ்ணர் புன்னகை புரிந்தவராக, அன்பனே, இன்று சதுர்த்தசி திதி. உன் நினைவாக இன்று முதல் "நரக சதுர்த்தி' என்று பெயர் உண்டாகட்டும். * இந்த விடியற்காலை வேளையில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் கங்கையில் குளித்த புண்ணியத்தை அடையட்டும்! * மக்கள் புதிய ஆடை, அணிகளை அணிந்து என்னை முறைப்படி பூஜைகள் செய்யட்டும். அப்படிச் செய்பவர்களுக்கு கிருஷ்ணனாகிய என்னுடைய அருளும், சத்யபாமாவின் அருளும் கண்டிப்பாக என்றென்றும் உண்டு. * "இந்த உலகம் உள்ள வரை மக்கள் உன்னை நினைத்து இதனை பெரியதொரு பண்டிகையாகக் கொண்டாடுவார்களாக' என்று அருள்புரிந்தார். * கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நரகாசுரன் அமைதி அடைந்தான். அவன் உயிர் பிரிந்தது. இது தான் நாம் தீபாவளி கொண்டாடுவதன் பின்னணி! **வெப்டைமில் இருந்து
சிவாலயங்களும் சைவசமயமும்
சிவாலயங்களைத் தத்தமக்குச் சொந்தமாக்க விரும்பும் எவரும் "ஆல்யங்களெல்லாம் ஒரு மொழியின் நிலயமல்லவே; ஒரு சாதியின் நிலயமல்லவே, ஒரு சமயத்தின் நிலயமல்லவா? அச்சமயத்தை நாம் தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ ஆலயங்களில் நமக்கு உரிமை யெய்துதல் கூடும்?" என்றின்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.அங்ஙனமின்றி ஆலயங்கள் தமிழர்க்கே யுரியன வென்றும், வடமொழியாளர்க்கே யுரியன் வென்றும் (வடமொழி இந்தியர்க்கெல்லாம் பொதுமொழி. அ·து ஒரு வகுப்பினர் மொழியன்று. எனினும் ஒரு சிலர் அது தமக்குரிய மொழியென்று சொல்லவும், மற்றும் ஒரு சிலர் அ·து உண்மையென் மயங்கலும் உண்மையின், இவ்வாறு கூறப்பட்டது), பிராமணர்க்கே யுரியன் வென்றும், திராவிடர்க்கே யுரியன் வென்றும் கூறி ஒரு சாதியார் அல்லது ஒரு மொழியார் வழக்கிடுதல் சிறிதும் முறையன்று.
கடவுள் என்றால் என்ன?
இன்றைய தேதியில் வலைப்பதிவுலகத்தை மென்பொருளாளர்கள் ஆண்டு வருவதால் அவர்கள் மொழியிலேயே விளக்குகிறேன். நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களையும் இயக்குவது program எனப்படும் கட்டளைகளே. கணினி விண்டோஸில் இயங்கினாலும் லினக்ஸில் இயங்கினாலும், அதை இயக்கும் புரோகிராம்கள் ஜாவா, C, என எந்த மொழிகளில் இருந்தாலும் அடிநிலையில் இக்கட்டளைகள் பைனரி பிட்டுகளான 1 மற்றும் 0 ஆகியவற்றின் வெவ்வேறு சேர்க்கைகளாகவே விளங்குகின்றன. ஆக, எல்லா மென்பொருளுக்கும் அடிப்படை இந்த ஒன்று, மற்றும் பூஜ்யத்திலான சங்கேதக் குறிகளே. இந்த 1, 0 தான் எல்லா மென்பொருளுக்கும் அடிப்படையான பரம்பொருள். இந்த பைனரி பிட்டுகளாலான intelligence வேலை செய்ய வேண்டுமானால் அதற்குத் தேவை மின்சாரம். ஹார்டுவேர் நிலையில் பார்த்தீர்களானால் இந்த 1, 0 இரண்டுமே மின்சாரத்தின் இரு வெவ்வேறு அளவுகள் என்று அறிய முடியும் (3V என்றால் பூஜ்யம், 5V என்றால் ஒன்று). 1 மற்றும் 0 ஆல் ஆன intelligenceஉம், மின்சாரமும் சேர்வதால் நிகழ்வதே மென்பொருள் மாயாஜாலம். அது போலவே இந்த உலகத்தில், பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் உயிர்களுக்கும் அடிப்படையாக cosmic intelligence ஒன்று உள்ளது. இது ஒரு உணர்வு நிலை (pure consciousness எனலாம்). இதை சிவம் எனலாம் (சிவன் அல்ல), பரம்பொருள் எனலாம், ஆதிபகவன் என்றும் கூறலாம். சிவமும், energy ஆகிய சக்தியும் புணர்வதால் நிகழ்வதே பிரபஞ்ச விளையாட்டு. உண்மையில் சிவமும் சக்தியும் வெவ்வேறல்ல. நெருப்பையும் அதன் சுடும் குணத்தையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அது போல் சிவமும் சக்தியும் ஒன்றே. நாம் அனைவரும், அனைத்துமே ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்களே. பரம்பொருளிலிருந்து வந்தவர்களே நாம். முடிவில் பரம்பொருளிலேயே கலக்கிறோம். ஆதியுமில்லாமல் அந்தமுமில்லாமல் நிகழும் இந்த ஆக்கமும் அழிப்புமே பரம்பொருளின் மூச்சு. உருவ வழிபாடு ஏன்? தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளும் தான் பரம்பொருள்போன்ற அருவ பொருட்களை சிந்திக்க விரும்புகிறார்கள். கொஞ்சம் கவித்துவமும் கலையுணர்வும் நிரம்பிய மனிதர்கள் சிவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்து சிவனாக்கினார்கள். சிவனையும் சக்தியையும் சேர்த்து அர்த்தநாரி ஆக்கினார்கள். இந்த உருவங்களை உருவாக்கியது மனிதர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெரியார் பாத்திரத்தில் சத்யராஜ் நடித்தாலும் நாம் திரையில் பெரியாரையே பார்க்கிறோமோ, அதுபோல் சிவனின் உருவத்தை பார்க்கும்போது சிவமாகிய பரம்பொருளையே பார்க்கின்றோம். சிவனில் மட்டுமல்ல, எல்லா மனிதர்களிலும், உயிர்களிலும், பொருட்களிலும், தத்துவங்களிலும், தன்னிலும்கூட பரம்பொருளை பார்ப்பவனே ஞானி. அவதார புருஷர்கள் மிருகங்களில் உடல் ரீதியில் நிகழ்ந்து வந்த பரிணாம வளர்ச்சி மனிதனில் மன ரீதியிலும், உணர்வு ரீதியிலும் நிகழத் தொடங்கியது. மனிதன் மன ரீதியில் தனக்கு மேலான குணநலன்களை வளர்த்துக் கொண்டு தனது பரிணாமத்தை வளர்த்து வருகிறான். குணநலன்களை பற்றி சிந்திக்கும் போது அந்த குணநலன்களை தாங்கிய உருவம் நம் மனதில் வருவது இயற்கையே. திடகாத்திரமான உடலைப் பற்றி நினைக்கும் போது நம் மனதில் அர்ணால்ட் ஷ்வார்ஷெநெகரோ வேறு ஒரு பாடி பில்டரோ நம் மனதில் தோன்றுவது இயற்கை. அதுபோல் தனக்கு மேலான குணநலன்களை தியானம் செய்ய மனிதனுக்கு அப்பப்போது ஒரு template தேவைப்படுகிறது. உருவமில்லாமல் வெறும் குணத்தை மட்டும் நினைத்துப் பார்க்கும் abstract thinking அனைவருக்கும் சாத்தியமில்லை. வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தபோது இந்தியர்களுக்கு அவர்களை உறுதியுடன் எதிர்க்கும் குணநலன்கள் நிரம்பிய template தேவைப்பட்டது. காந்தியையும் சுபாஷ்சந்திர போஸையும், மற்றோரையும் மக்கள் ஆதர்ஸமாக நினைத்து பின்பற்றினர். சாதிக் கொடுமைகளால் வாடிய சமூகத்துக்கு அதை தைரியமாக எதிர்க்கும் குணம் தேவைப்பட்டது. அதன் உருவமாக விளங்கிய பெரியார், நாரயணகுரு போன்றோரை பின்பற்றினர். இதுபோல் பல்வேறு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மிகவுயர்ந்த குணநலன்களுடன் தோன்றிய இயேசு, புத்தர், கிருஷ்ணர் போன்றோரை மக்கள் பின்பற்றி, வழிபட்டு, அவர்களை அவதாரங்கள், தேவதூதர்கள் என்று போற்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இந்த template மாமனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம். பிரம்மச்சரியம், வலிமை, தாச பக்தி போன்றவற்றின் உருவமாக அனுமார் போற்றப்படுகிறார். நாம் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மனதத்துவ ரீதியில் ஒப்புக்கொள்ளப்படும் கருத்து. அனுமான் கற்பனையா, உண்மையா என்பது முக்கியமல்ல. அவரின் குணமாகிய உடல் வலிமையை நீங்கள் உண்மையாக வழிபட்டால் நாளடைவில் உங்கள் உடலும் வலிமையடையும் என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்கள் புரிபவர் தான் அவதாரமா? பிரபஞ்ச விளையாட்டே அற்புதம் தானே. மனிதனின் அற்ப கண்டுபிடிப்புகளை அற்புதம் என்று வியக்கும் நாம், சூரியனைச் சுற்றி கோள்கள் துல்லியமாக உலா வருவதையும், இரவு வானத்தில் சந்திரனின் அழகையும் அற்புதம் என்று அவ்வளவாக போற்றாததே ஒரு அற்புதம் தானே! மனிதன் தன்னால் விளக்க இயலாத நிகழ்வுகளை அற்புதம் என்கிறான். நூறு வருடங்களுக்கு முன்பு இது போல் ஒரு பெட்டி மூலம் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று கூறியிருந்தால் பைத்தியம் என்று பட்டம் கட்டியிருப்பார்கள். அது போல், டெலிபதி போன்ற விஷயங்களும் எதிர்காலத்தில் வெகுஜனங்களிடையே சாத்தியமாகும் என்றே நான் கருதுகிறேன். சாதாரண மக்கள் அற்புதம் என்று நினைக்கும் செயல்களை சர்வசாதாரணமாக நிகழ்த்தும் மனிதர்கள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். தான் செய்யும் செயல்கள் அற்புதம் என்றும், ஏதோ இவை தனக்கே உரித்தான ஆற்றல்கள் என்றும் காட்டிக் கொள்பவர்கள் அவதாரங்கள், தேவ தூதர்கள் கிடையாது. தான் செய்யும் அசாதாராண செயல்களை மக்களின் நன்மைக்காக செய்பவர்களும், எவராலும் செய்ய முடியும் என்றும் கூறுபவர்களே அவதாரங்கள், தேவ தூதர்கள். சொர்க்கம், நரகம், மறுபிறவி? மறுபிறவி பற்றிய ஆராய்ச்சிகள் அறிவியல்ரீதியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மறுபிறவி போன்றவற்றை ஆதரித்து பல முடிவுகள் வந்துள்ளன. தனிப்பட்ட முறையில் மறுபிறவியை நான் நம்புகிறேன். அனால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கையே. ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்வது வேறு, அதை அனுபவித்து உண்மை என உணர்வது வேறு. மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவை உள்ளதா என்று எவ்வளவுதான் விவாதித்தாலும், இறந்த பிறகு அனுபவித்து உணர்ந்த பிறகு தான் உண்மை என்றோ, உண்மை இல்லை என்றோ வலியுறுத்திக் கூற முடியும். இறந்த பிறகு இதை அனுபவிக்க முதலில் ‘நான்’ இருப்பேனா என்பதே கேள்விக்குறி தான். அதுவரை, நாம் வாழும் இந்த வாழ்க்கையிலேயே நம் கண்ணோட்டத்தின் மூலம் சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளலாமே. பிரபஞ்ச விளையாட்டை ஆனந்தமாக, ஒரு spirit of adventureஉடன் விளையாடினால் இந்த வாழ்க்கையே சுவர்க்கம் தான். வாழ்க்கையை போராட்டமாக நினைத்து பயத்திலும் புலம்பலிலும் காலத்தை கழித்தால் அதைவிட நரகம் வேறென்ன இருக்க முடியும். வாழ்க்கையை ஆனந்தமாக விளையாடுங்கள்
வேதத்தில் மந்திரங்கள்
வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்
: "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:துரீயஸ்தே மனுஷ்யஜா:
என்று ஒரு மந்திரம். வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம். வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் சரியாகப்புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
சமய வளர்ச்சிக்கு
தர்மம் , சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை உண்டாக்கலாம் ; உருவாக்கலாம் ; சாதனை புரியலாம்.ஒரு துறையில் மட்டுமல்ல ; பல துறைகளில் , நாம் நமது ஒன்றுமையைக்கட்டிக் காக்கலாம். கல்வி , கலாச்சாரம் , பாரம்பரிய சம்பிரதாங்களையும் போற்றிப் பேணலாம். இதனால் எண்ணியவைகளைக் கனவாகாமல் முடிக்கலாம். இதனால் திண்ணியவராகப் பெறலாம்.'' இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் '' என்பது நாட்டின் அறக்கோட்பாடுகளில் தலையாயனது.'' சமூகம் '' சிறுபான்மையினர் எனினும் அவரவர் சமய வழிபாட்டுக்குச் சுகந்திரம் உண்டு. மரபுடன் சமரச சன்மார்க்கம் கண்ட பரம்பரை நம் இந்திய சமூகம். ''சநாதன தர்மம் " என்ற சிறப்பும் இந்து சமயத்திற்கு உண்டு." சிறப்புக்குரிய " சிறிய சமூகத்திற்க்கு உள்ள சமயச் சிறப்புக்கு இந்துக்கள் ஆற்றும் ஆற்றக் கூடிய சாத்தியம் என்ன ? இளையர்களை எப்படி இணைக்கலாம் அவர்களை சமயத்தின் பால் ஆர்வம் கொள்ளவது எப்படி ? இதனை காலத்தையொட்டிச் சிந்திக்க வேண்டும்.காலமெல்லாம் என்ற கேள்விக் குறியில் நில்லாது அல்லது இல்லாது சமயம் காத்து , நம்மையும் காத்து , நடப்பில் காலத்தையும் கணித்து வாழத்தெரியக் கூடிய நடைமுறைச் சாத்தியங்களைச் சமயத்தின் வளர்ச்சி வழியில் காணவேண்டும் என்பதே நமது அவா !பேதங்களை அகற்றி , இந்து சமய வழியில் யாவரும் ஒன்றிணையலாம். இணைய வைக்க '" மார்க்கம் " உண்டு. அதற்கு மனம் வேண்டும். மனம் , சமய மணம் பரப்ப , விரிய வேண்டும். விரிவில் ' விரிசல் ' ஏற்படா¡து, மேல் - கீழ் பார்க்காது , ஊனக் கண்ணை நீக்க வேண்டும் ; ஞானக் கண்ணைத் திறக்கச் சமய ஞானம் ஒளி பெற வேண்டும். இதற்கு " அடிப்படைச் சமய ஞானம் " என்ன என்பதை , இளமையிலிருந்தே ஊட்டப்பவும் வேண்டும்.நம் சமயத்தில் நடிப்பு , நடப்பாகலாகாது.ஆலயங்கள் , மன்றங்கள் யாவும் ஒன்று கூடி , ஒரு குடையின் கீழ்நின்று செயல்களை தீட்டிச் செம்மையாகச் செய்ய வேண்டும். சக்திகளைக் கணித்து அறிந்து, நம்மை நாமே மறு விமர்சனம் செய்து , எதிர்காலத்தில் வலிவு தரும் செயல் பாடுகளை ராயவேண்டும்.படித்தவர்களும் பாமரர்களும் , மாணவர்களும், இளையர்களும்சமய உணர்வில் ஒன்றிக்கும் சாத்தியக் கூறுகளையும் அறிய வேண்டும். நம் காலத்துடன் சமயம் போய்விடா¡து ; இளைய சந்ததிகளுக்கும் அதனைச் சிறப்புச் சொத்தா¡க விட்டு வைக்க வேண்டும். பயனுடைய சிறு அளவு செயல் ஆனாலும் எதிர்காலத்தில் அது விருச்சமாக விரியும். நாம் எதனைச் செய்தல் சாலும் என்பதை ஓர்தல் அவசியமாகிறது. பயனுடைய சொல்லைச் சொல்லுக ; செயலின் சிறு அளவிலேனும் கொள்ளுக என்பதை வேதமாக பெறலும் வேண்டும்.இங்குள்ள இந்து சமயத்தின் செயல் திறங்களை ஒன்று படுத்த, அதன் அடிப்படைகளைச் சரியான தளத்துடன் பேணப்பவேண்டும்.சமயம் நம் வாழ்க்கைக்கு அடிப்படை. மனப்பக்குவத்தை, அதற்கு மேல் வைக்கவேண்டும். குழம்பிய மனப்பான்மையில் சமயத்தை அணுகலாது. நம் சிறார்களுக்கு சமயத்தின் மேன்மை , உயர்வு, விஞ்ஞானத்தோடு இயைந்த சிறப்பு தன்மை , அடிப்படை இயல்பு தன்மை போதாதது. அல்லது அறவே இல்லை ! என்றும் கூறலாம். வீண் சர்ச்சைகளால் பயனில்லை. சமய ஞானம் உள்ளவர்கள் நம் சமூகத்திற்கு இதில் வழிகாட்டவேண்டும்.ஒரு இந்துவின் சமய வாழ்க்கைக்கு ஆலயம் அடிப்படை. வீட்டிலும்வணங்கலாம். ஆனால், ஆலயம் சென்று , ஆகம முறைப்படி வணங்குவதென்பது எதனால் என்பதை உணர்ந்து காரிய மாற்று செய்ய வேண்டும்.பிற சமயங்கள் , தாங்கள் வழிப்படும் ஆலயம் அல்லது தேவாலாயம், பள்ளிவாசல் , பெளத்த விகாரங்களின் வழி , தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ளவதைக் காணலாம். அந்த சாத்தியம் நமக்கும் உண்டு. ஆனால் நாம் அதனை செம்மையாக செயல்படுவதில்லை. நமது சமயத்தின் சாரத்தை , பெருமையை, கீர்த்தியினை அறிந்து மற்றவர்களுக்கும் எடுத்து இயம்ப வேண்டும்.சாதாரணமாக நான் எல்லா இடங்களிலும் , நாடுகளிலும் இதனைக் காண்கிறேன். ஒரு சாதாரண இந்து குழப்புகிறான்.இமயத்திலிருந்துக் கொண்டு , மடுவில் நிற்பவனைப் பார்த்து , என்னைப்போல் நீயும் உச்சிக்கு வா என்று வாயளவில் சொல்லாது , உச்சியிருப்பவர்கள் இறங்கி வந்து , தான் பெற்ற சமய இன்பத்தை அந்த பாமர இந்துக்கு காட்டி , உச்சிக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். அதுவே தர்மமாகும்.ஞானச்சுடரை ஏற்றக்கூடிய மையத்தைக் காட்டவேண்டும். இந்துசமயத் தத்துவத்தைப் படிப்படியாகப் படியும் வகையிலும் , புரியும் வகையிலும் , வகையும் தொகையும், நிலையும் நினைப்பையும் தெரிந்து , கொஞ்சம் கொஞ்சமாக ஞானத்தீபத்தினை ஏற்றப் பழக்க , பழக வேண்டும் - சமயம் தெரிந்தவர்கள் - சான்றோரகள்.சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், தென் ஆப்பிரிக்கா [டர்பன்]ஆகிய நாடுகளில் சில ஆலயங்களிலும் , மற்றும் சிலர் தனிபட்டவர்களும், நல்லவர்களும் வல்லவர்களும் ஆங்காங்கு ஆசிரியர்மார்களும் சிறார்களுக்கும் - சமய பேதனை செய்வதுடன் , மறவாது தமிழினையும் கற்று தருவதைக் காண்கிறேன். இந்த மனப்பக்குவத்தால் நாம் ஒன்றி இணையலாம்.இந்த மாற்றத்தினால் நம்மிடமும் பலம் உண்டு என்பதை அறியலாம்.எல்லா நாட்டிலும் மாற்றங்கள் மிக விரைவாக நடைபெறுகிறது. இதனை உணர்ந்து நம் சமய வழிபாட்டிலும் கமத்தின் அச்சாணிக்கு ஊறு ஏற்படாவண்ணம் ஒன்றிணைந்து செயல்படும் வழிமுறைகளை ராயவேண்டும்.இந்து தர்ம வாழ்வு , அவர்களுடைய வழிபாட்டில் முடியக் கூடியதல்ல ; ஆத்மவுடன் , அதை வளர்க்கக் கூடிய கல்விக்கும் , அதனைச் சார்ந்த கலைக்கும் கலாச்சாரப் பண்பாட்டிற்கும் , சிந்தனைக்கும் ஏன் பொருளாதாரச் சிந்தைனைக்கும் வாழ வழி காட்டும் அகிம்சா சிந்தைனைக்கும் கூட தேவையானதா¡கும். இதனை நம் இளையர்கள் சிந்திக்க வேண்டும்.இந்த வழிகளில் இந்து சமயத்தை அடி வேரிலிருந்து , நுனிக்கிளையிலுள்ள தளிர் வரைக்கும் இதன் சத்து பரவியிருக்கப் பார்த்துக் கொண்டால் , சமயம் காலவோட்டத்தில் அசைக்க முடியாத ஆணிவேரைப் பசுமையுடன் ஊன்றிவிடும் நம்பிக்கை உண்டு.நாடெங்கிலும் சமய சொற்பொழிவுகளை நடத்தலாம் ; கருத்தரங்குகூட்டலாம் ; சமய விழாக்களை நடத்தலாம்.இன்னும் மனமிருந்தால் எவ்வளவோ செய்யலாம். சிறுபான்மையோராக இருக்கும் நமக்கு - நமக்களிக்கப்பட்டிருக்கும்சமய வழிபாட்டுக்குரிய உரிமையைப் பயன் படுத்திக் கொண்டால், பயன் படுத்திக்கொள்ளுவதில்தான் எல்லாச் சிறப்பும் உண்டு.அதற்கு அடிப்படை போடுங்கள். சமயத்தின் வளர்ச்சிக்குச் சமூகம் செய்யக் கூடிய சாத்தியங்களை தொடங்குங்கள்.
இந்து தர்மகீதை கூறும் ஆன்மீகம்
வேதங்களின் உதாணரமான உபநிடதம், பகவத் கீதை, மகாபாரதம், இராமயாணம்,முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பகவத்கீதை என்ற புகழ் வாய்ந்த பகுதி மகாபாரத்தில் உள்ளது. குருசேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்-கெளரவ அணிகளுக்கிடையில் போர் மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அர்ச்சுனன் உறவு சார்ந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனம் சோர்ந்து உள்ளான். இந்நிலையில் ,சாரதியான கிருஷ்ணன் அவனது மனச்சோர்வுக்கான அடிப்படைகளை அகற்றும் வகையில் அறிவுரை புகட்டுகிறான். தனது உண்மையான தெய்வீகக் கோட்பாட்டை வழங்கி அதன் மூலம் அவனே போர் புரிவதற்கு நெறிப்படுத்துகிறான்.மகாபாரதம் கதையமைப்பில் கதை என்ற பகுதி தரும் இது.பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், அவைகள் ஆறு அத்தியாயங்களாய் மூன்றுபகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் தத்துவம், இதம், கடமை என விவரித்துள்ளது.மூன்று காரணங்களால் இதை இணையற்று விளங்குகிறது.அவை :"அது உபதேசிக்கப்பட்ட இடம், சந்தர்ப்பம் ""அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி "" தனி நபரின் முயற்சிக்கு கீதை கொடுக்கும் முக்கியத்துவம் "கீதையின் பிறப்பு, இதனை உபதேசிக்க தேர்தெடுத்த இடம் போர்களம் " போர் செய்யமறுக்கும் அருச்சுனனுக்கு இது உபதேசிக்கப்படதுதான். ஆன்மீக விளக்கங்களும், வாதங்களும் நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, செயலுக்கு ஒத்துவராத வெறும் சொற்களே அல்லது வாதங்களோ அல்ல. அவை வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறி முறைகள்.பகவத் கீதை தர்ம சாஸ்திரமாக மட்டுமே விளங்குகிறது என்ரு பலரும் நினைத்துக்கொண்டு உள்ளனர். இது தவறான கருத்தாகும், எண்ணமாகும். பகவத் கீதை ஆன்மா உயர்வுக்கு காட்டியாக உள்ளது. மனிதன் சகல துக்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிருந்தும் விடுபடும் வழியினை, மார்க்கத்தினை போதிப்பதே, உபதேசிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்." கடவுளை நம்பினோர் கைவிடப்பார் " இதுவே பக்தி.அவனை நம்பியோர் செய்யத்தக்கது எதற்கும் துயர்ப்படாமல், பயப்படாமல் இருத்தல்-எதற்கும் ஐயறவு கொள்ளாதிருத்தல்." ஐயமுடையோன் மேன்மையடையான், நம்பியவன் மேன்மையும், மீட்சியும் அடைவான்"மேன்மையும்-மீட்சியும், மோட்சத்தையும் கூறும் பகவத் கீதை பலர் கொலை நூலாகக்கருதுவார். துரியோதனையும், அவனைச் சார்ந்தோரையும் கொல்லும்படி அர்ச்சுனனைத் தூண்டுவதற்கு இந்தப் பதினெட்டு அத்தியாயங்களும் கிருஷ்ணனால் கூறப்படுவதால் அத்தகைய கருத்து நிலவுகிறது.உண்மையில் பகவத் கீதையின் உட்கருத்து ஆன்மாக்களை இறைவனது துணையுடன் காமக் குரோதங்களை நீங்கி ஆன்மீகத்தை அடைய வேண்டும் என்பதே. துரியோதனன் முதலானவர்கள் காமம், குரோதம், சோம்பல், மடமை, அகங்காரம், மறதி, கவலை, துயரம், ஐயம்போன்ற பாவ சிந்தனை உள்ளவர்கள்.அர்சுனன் : ஜீவாத்மா [ஆத்மா]கிருஷ்ணன் : பரமாத்மா.இதுவே கீதையின் உட்கருத்து. இந்த உட்பொருளை அறியாதவர்கள் கீதையை ஒருபோதும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.அதேபோல் , பகவத் கீதை சந்நியாச அல்லது துறவற நூலன்று.வீடு, மனைவி, மக்கள், சுற்றத்தை துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை, துறவற நெறியில்செல்லும்படி கீதை கூறவில்லை. அது கடமையை வலியுறுத்துகிறது." ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவரசெய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் " என்ற கொள்கையை மிக அழுத்தமாக உபதேசிக்கிறது தன்கடமை செய்யாது நிலைகுலைந்து போன அர்ச்சுனனுக்கு அவனது கடமையினை தர்மத்தினை மிகத் தெளிவாக,"அர்ச்சுனா, சத்திரியான நீ உன் கடமையான போரைச் செய் " என கிருஷ்ண பரமாத்மா வலியுறுத்துகிறான்.இது போன்றே நமக்கும் வாழ்க்கைப் போர் உள்ளது. நாம் வாழ்க்கையில் பல தடவைகள்சோம்பலாலும், கோழைத்தனத்தாலும் கடமைகளிலிருந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்."அர்ச்சுனா எழுந்திரு ! இந்த மனத்தளர்ச்சியை, இந்த பலவீனத்தை ஒழி,எழுந்து நின்று போர் செய்..." என்று கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுன்னுக்குக் கூறும்இவ்வார்த்தை மிகவும் பொருத்தமாக நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கை கடமைகளைச்செய்துகொண்டு வாழ்வதற்குரியது ; துறப்பதற்குரியது அன்று என்பது இதன் பொருள்.கீதையில் தனிச்சிறப்புடன் விளக்கும் இன்னொரு கொள்கை " பற்றின்மை "என்பதாகும்." கடமைக்காகவே செய்யப்படும் கடமையே வினைத் தளையைப் போக்கும் "என்பதாகும். எல்லா செயல்களையும் கடவுளுக்கு என்று சமர்ப்பித்துவிட்டு பற்றுதல் இன்றி எவன் தொழில் செய்கிறானோ அவன் பக்கம் நான் இருப்பேன். ஒருவனுக்கு பற்றின்மை ஏற்படும்போது அவனுக்கு ஏனையோரின் பொறாமையும், சஞ்சலமும் கொள்ள வழியில்லை.தன் செயலுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படவும் மாட்டான்."சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனுக்கா தனிமனிதன்தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்...."கீதையின் தொனிப்பொருள், சாரம், உட்பொருள் இதுதான். இதன் 18 அத்தியாயங்களில்அமைந்த 700 சுலோங்கங்களும் இதன் விரியுரைகளே. அப்படி அமைய வேண்டிய மனப்பக்குவம் என்ற வகையில் கீதை , " பலனில் பற்று வைக்காத செயல் திறன் " .இது செயலில் துறவு என்பது பற்றிப் பேசுகிறது.இவ்வாறான பற்றின்மை செயல் ஊக்கத்தைப் பாதிக்காலாது என்பதைச் சுட்டுவதற்காக கடமை உணர்வு வற்புறுத்தப்படுகிறது. கடமையில் உணர்ச்சிபூர்வமாகஈடுபடுவதை ' தியானம், பக்தி என்ற அணுகு முறையினை முன் வைக்கிறது,சுட்டிக்காட்டுகிறது." கல்வி கற்றோரிடமும் , சண்டாளாரிடமும் , மிருகத்திடமும் அறிஞர்கள் சமமானபார்வை உடையோர்..." [5-18] என்று கிருஷ்ணன் கூறுகிறான்.கண்ணபிரான் மனிதருள் சாதிவேற்றுமை, அறிவுவேற்றுமை , பிரிவு வேற்றுமை போன்றவைகள் ஏற்படக்கூடாது என்றும், எல்லா உயிர்களூள்ளும் எவ்வித வேற்றுமையும் இல்லை எனக் கூறுகிறார். வேற்றுமை உள்ள இடத்தில் பயமுண்டு, பத்துண்டு, மரணமுண்டு ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புள்ளவர்கள் என்றும் துக்கங்களிலிருந்து விலகமாட்டார்கள். எனவே எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே 'ஆன்ம ' ஈடேற்றத்துக்கு உரிய வழியாகும்.ஆன்ம ஈடேற்றம் அடைய விரும்புவனுக்கு முக்கியமான சாதனம், அவனது சொந்தமனமாகும்."... தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன்...""... தன்னைத் தானே ஆளாதவன் தனக்கு தானே பகைவன்...""... ஒருவன் தனக்குத் தானே நண்பன்; தானே தனக்கு பகைவன்...""... உள்ளப் பகையே பகை; புறப்பகை பகையன்று..."இக்கருத்து மனித வாழ்க்கையில் முக்கியமானது.எந்த உயிர் பிராணிக்கும் இம்சை, தொல்லை செய்வோர் உண்மையானஅன்புடையர் அல்ல. உண்மையான பக்தராகமாட்டார்; எந்த ஜீவனையும் கண்டு வெறுப்பு அடைபவர்கள்ஈசனுடைய மெய் அன்பினை பெறமாட்டார்கள். கொல்லாமையே முக்கிய தர்மம் என்பதுகொள்கையாகும்.பிறருக்கு தீங்கு இழைக்கும் பொருட்டு அவரை வெறுத்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் இருப்பவர்கள் இறுதியில் தாமே அழிந்துவிடுவர் என்று கீதையில் கூறப்படும் கருத்து சிந்திக்கத் தக்கது , எண்ணி செயல்படத்தக்கது.இவ்வாறு சிந்திக்கும் போது கீதை கூறும் வாழ்வியலானது காலம், இடம், சமூகம்,ஆகிய எல்லைகளைக் கடந்தாகவும் பல நிலைப்பட்ட பிரச்சைனைகளுடன் தொடர்புப்படுத்தி அமைந்துள்ளதை காணலாம்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கலாச்சாரமுடைய ஒரு காலக் கட்டத்தில் முன் வைக்கப்பட்ட கீதை , வாழ்வியல் நோக்கமானது. காலந்தோறும் பேணப்பட்டு வந்துள்ளமையையும் வெவ்வேறு அடிப்படைகளில் புரிந்து கொள்ளப் பட்டமையையும் வரலாறு உணர்த்தும்.விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி முதல், வேறு சிலர் பலரும்கீதையின் நோக்கத்துக்கு ஏற்ப அணுகியுள்ளனர் அதனை வழி காட்டியாகவும் கொண்டு பலரும் சிந்தித்து சிறந்துள்ளனர். பாரதியார் முதல் - கண்ணதாசன் வரை சிந்தித்துள்ளனர்.நாமும் சிறிது சிந்திப்போம். முடிந்தவரை செயல்பட முயல்வோம்
ஓம் என்னும் பிரவணம்
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரவணன்"அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு." ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்தசிவசக்தியினையும் குறிக்கும்.இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும் சொல்கிறார்கள்.இதனை திருமூலர், திருமந்திரத்தில் :" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழிஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதைசதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிதோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சுஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும் குறிப்பிட்டுள்ளார்.சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து." அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ," அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ""அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.உருவமும்- உடலும்.உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்."கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம் "உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகிவிந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கிநிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்," ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கேஇணைத்து அடக்கி நிற்கும்."ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்தன்மை நீங்களும் காணலாம்.You see, there is no gain without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாதுஎன்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாககாற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.இதனை திருமூலர் :"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றிஇறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போலொரு வயது தானுமாச்சுநேரப்பா இருபத்தி நான்கு சென்றால்நேர்மையுள்ள வயது மீரண்டாகும்சீரப்பா முப்பத்தி ஆறுமானால்சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.

