சிவாலயங்களும் சைவசமயமும்

சிவாலயங்களைத் தத்தமக்குச் சொந்தமாக்க விரும்பும் எவரும் "ஆல்யங்களெல்லாம் ஒரு மொழியின் நிலயமல்லவே; ஒரு சாதியின் நிலயமல்லவே, ஒரு சமயத்தின் நிலயமல்லவா? அச்சமயத்தை நாம் தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ ஆலயங்களில் நமக்கு உரிமை யெய்துதல் கூடும்?" என்றின்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.அங்ஙனமின்றி ஆலயங்கள் தமிழர்க்கே யுரியன வென்றும், வடமொழியாளர்க்கே யுரியன் வென்றும் (வடமொழி இந்தியர்க்கெல்லாம் பொதுமொழி. அ·து ஒரு வகுப்பினர் மொழியன்று. எனினும் ஒரு சிலர் அது தமக்குரிய மொழியென்று சொல்லவும், மற்றும் ஒரு சிலர் அ·து உண்மையென் மயங்கலும் உண்மையின், இவ்வாறு கூறப்பட்டது), பிராமணர்க்கே யுரியன் வென்றும், திராவிடர்க்கே யுரியன் வென்றும் கூறி ஒரு சாதியார் அல்லது ஒரு மொழியார் வழக்கிடுதல் சிறிதும் முறையன்று.

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes