
அழிவற்ற கல்வியும் அன்பெனும் ஜீவசக்தியும்
ஆன்மீக கருத்துக்களும் ஆணவமற்ற வாழ்வும்
இளமைப் பருவத்தில் எண்ணும் எழுத்தும்
ஈகையின் அவசியம் கற்பித்த ஆசானும்
உண்மையின் மகத்துவம் உணரவைத்த குருவும்
ஊக்கம் உள்ளோரும் உறுதி கொண்ட மாணவரும்
எட்டாவது தொடங்கி உயர்தர வகுப்பும்
ஏணிப்படிகளாய் இருந்தனர் நற் பெரியோரும்
ஐயம் திரிபுற கற்றோம் பல நூல்களும்
ஒழுக்கமும், பண்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்
ஓர் பெரும் இலட்சியம் உறுதி கொண்ட வாழ்வும்
ஒளவையின் நன்நெறியும், திருமூலரின் திருமந்திரமும்
திருவள்ளுவரின் திருக்குறளும்
கற்பித்த கனகரெட்னம் மத்திய மகா வித்தியாலயம்
மெல்லினம், வல்லினம், இடையினம்
கற்றோம் நாம் தமிழ் மொழியில்
மெல்லினமாம் பெண்களும்
வல்லினமாம் ஆண்களும்
இரண்டும் கலந்த இடையினமாம்
எங்கள் கலவன் பாடசாலை
உயிரும் மெய்யும் உள்ளது தமிழில்
இரண்டென உள்ளதை ஒன்றாக்கிய பெருமை
கற்பித்தவர் கனகரெட்னம் மத்திய மகா வித்தியாலயம்
மீண்டும் மீண்டும் எம் நினைவில் நீ
எம் ஜீவன் இருக்கும்வரை நினைவில் இருப்பாய் நீ
எம் கனவிலும் நினைவிலும் எப்போதும் இருந்தாய் நீ
எம் பள்ளி வாழ்க்கையை மறப்போமா சொல் நீ
எம்மை கவி எழுத வைத்த வாத்தியார் நீ
வாழ்க நிரந்தரம் வாழிய வாழிய நீ
வாழ்த்துகிறோம் நாம்
நினைவில் ஓர் ஆலயம்
posted on 13:49
in
இவ்வாரச் சிந்தனைக்கு,
கவிதை,
சைவ சமயம்






