மெளனம்: பேசாதிருக்கும் நிலைமை

மௌனம் என்பது வாயால் பேசாதிருக்கும் நிலை மட்டுமல்ல. "வாக்" என்று
அழைக்கப்படும் பேச்சு எங்கிருந்து எழுகிறது என்பதை அறிந்து, அந்த
மூலஸ்தானத்திலேயே எழாமல் அடக்குவதுதான் மௌனம் என்று யோக
நூல்கள் கூறுகின்றன. வாய்திறந்து பேசும் பேச்சு, "ஸ்தூல வைகரி வாக்"
எனப்படும். வாயைத்திறவாமலேயே மனதிற்குள் ஓடவிடப்படும் எண்ணங்களை
"சூக்கும வைகரி வாக்" என்பார்கள். வார்த்தை உருவில் அல்லாது வெறும்
ideaவின் கருப்பொருளாக விளங்கும் போது, அதை "மத்யமா வாக்" என்பார்கள்.
இதைவிட அதிசூக்குமமான இரு நிலைகள் இருக்கின்றன. அபஸ்யந்தி, பரா" என்று
பெயர் பெறும். அபரா வாக்" என்பதுதான் எண்ணம் அல்லது பேச்சின் ஆரம்பநிலை.
பாடுவதை, பேசுவதை எல்லாம் குறைத்து, பேச்சு எங்கிருந்து தோன்றுகிறது
என்பதைக் கண்டறியுமாறு அனாநந்த கிரி சுவாமிகள் வலியுறுத்துவார்.

இந்த இடத்தில் அடங்குவதுதாம் "மோனநிலை" எனப்படும்
உண்மையான மௌனம். இதுதான் ஆ னந்தனம் பிறக்கும் நிலை. ஆ கவேதான்
"மோனம் என்பது ஆ னந்த வரம்பு" என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.

மெளனவிரதம்: பேசாதிருக்கும் விரதம் vow of silence

"மௌனவிரதம்" என்றால் வாய்பேசாதிருத்தல் என்று
கொள்வார்கள். ஆ னால் அதிலும் சில gradeகள் உள்ளன. வாய்பேசாமல்
எழுதிக்காட்டுவார்கள். இதற்கு அடுத்தபடி, எழுதவும் மாட்டார்கள், ஆனால்
கைச்சைகை காட்டுவார்கள்.

ஆனால் இவையெல்லாம் உண்மையிலேயே
"Body-Language" எனப்படும் பேசாமொழியாகும். உண்மையான மௌனத்தில் body-language அடிபட்டுப்போகும்.

சில சமயங்களில் காஞ்சி மஹாப்பெரியவர்கள் ஒரு விசேட
மௌனவிரதத்தைக் கடைபிடித்திருக்கிறார். நம் திசையில் பார்ப்பதாகத்
தோன்றும். ஆனால் நம்மையும் தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.
ஆனால் அங்கும் எந்த இலக்கையும் குறிப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க
மாட்டார். முகமனாக சைகையோ கண்பார்வையோ காட்டமாட்டார். எதையுமே
கவனிப்பதாக இராது.

ரமண மகரிஷியும் இவ்வாறு பலமணிநேரம் அமர்ந்திருப்பதுண்டு.
அதனை விவரித்து எழுபதாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை சென்று
அவரை தரிசித்த பால் பிரண்ட்டன் தன்னுடைய "Search in Ancient India"
புத்தகத்தில் எழுதியிருப்பதைக் காணலாம். யோகியர் ஞானியரைப் பற்றி
நன்கு அறிந்துகொள்ள உதவும் நூல்களில் சிறந்தவற்றில் இதுவும்
ஒன்று. படிக்கவேண்டிய ஒன்று.


மெளனி: மெளனமாக இருப்பவர், மெளன விரதம் பூண்டவர்

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes