தினமலர்
தரையில் படுத்த பெருமாள்
பாம்பின் மீது பள்ளிகொண்ட பெருமாளை எல்லாக் கோயில் களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், தரையில் படுத்திருக்கும் பெருமாளைப் பார்த்ததுண்டா? மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாளைக் காண வந்தால், இந்த அரிய காட்சியைக் காணலாம். இவர் தரையில் படுத்த காரணம் தெரியுமா? புண்டரீக மகரிஷி என்பவர் பெருமாளைத் தரிசிக்க வைகுண்டம் சென்றார். வழியில் கடல் குறுக்கிட்டது. கடலைத் தாண்டினால் தான் வைகுண்டம் செல்ல முடியும் என்பதால், கடல் நீரை இறைக்க ஆரம்பித்தார். கடல் நீரை இறைக்க யாராலும் முடியுமா? ஆனால், பெருமாள் நினைத்தால், அந்தக் கடலே ஒரு குடம் நீராக மாறிப்போகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அவர், விடாமல் தண்ணீரை இறைத்தார். உடல் களைத்து வருந்தினார். அதற்கு மேலும் அவரைச் சோதிக்க விரும்பாத பரந்தாமன், முதியவர் வடிவில் வந்தார். தனக்கு பசிப்பதாகச் சொல்லி உணவளிக்கும்படி வேண்டினார். புண்டரீகரும் அவருக்கு உணவு கொண்டு வரச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, முதியவராக வந்த பரந்தாமன், சங்கு, சக்கரம் இல்லாமல், கடல் முழுவதும் வற்றிய நிலையில், மணல்பரப்பில் சயனக்கோலத்தில் காட்சி தந்தார். கடற்கரை மணலில் சயனித்திருப்பதால் இவருக்கு ஸ்தல (தரை) சயனப்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது
தினமலர்
தினமலர்







